ஒரே மாதத்தில் 87 உயிரிழப்புகள் தீவிர சிகிச்சைப் பிரிவில் கேரள சுகாதாரத்துறை
23 Jun 2026, 9:04 pm

ஒரே மாதத்தில் 87 உயிரிழப்புகள் தீவிர சிகிச்சைப் பிரிவில் கேரள சுகாதாரத்துறை

ஒரே மாதத்தில் 87 உயிரிழப்புகள் தீவிர சிகிச்சைப் பிரிவில் கேரள சுகாதாரத்துறை ருந்து, தொற்றுநோய்களின் பரவல் மிகத் தீவிரமடைந்துள்ளது. கடந்த ஒரு மாதத்தில் மட்டும் மாநிலம் முழு வதும் பல்வேறு தொற்றுநோய்களால் பாதிக்கப்பட்டு 87 பேர் உயிரிழந்துள்ள னர். குறிப்பாக ஜூன் மாதத்தில் மட்டும் இதுவரை 72 பேர் பலியாகியுள்ளனர். சுகாதாரத் துறையின் கணக்குப்படி, மாநிலத்தில் தினமும் சராசரியாக 3 பேர் தொற்றுநோய்களால் உயிரி ழக்கும் அபாயகரமான சூழல் நிலவு கிறது. பருவமழைக்கு முந்தைய தூய்மைப் பணிகளைச் சரியாக மேற் கொள்ளாததே இந்த நோய் பரவலுக்கு முதன்மைக் காரணம் என்று குற்றம் சாட்டப்படுகிறது.

மே 19 முதல் கடந்த சனிக்கிழமை வரை, சுமார் 2.96 லட்சம் பேர் காய்ச்சல் காரணமாக அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றுள்ளனர். இதில் 1,736 பேருக்கு டெங்கு பாதிப்பு உறுதி செய் யப்பட்டுள்ளது. மேலும் 4,430 பேர் அறிகுறிகளுடன் சிகிச்சை பெற்று வரு கின்றனர். இதுவரை 11 பேர் உயிரி ழந்துள்ளனர். 7 பேரின் மருத்துவப் பரி சோதனை முடிவுகள் இன்னும் வர வேண்டியுள்ளது.

இன்ப்ளூயன்ஸா & எலி்க்காய்ச்சல் நோய்களால் பாதிக்கப்பட்டு தலா 16 பேர் (மொத்தம் 32 பேர்) உயிரி ழந்துள்ளனர். மூளை உண்ணும் அமீபா தொற்றால் குருவாயூரைச் சேர்ந்த 67 வயது முதியவர் உயிரிழந்துள்ளார். கொல்லத்தைச் சேர்ந்த மற்றொருவ ரின் மரணமும் இந்நோயால் ஏற்பட்டி ருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. ஒரே நாளில் புதிதாக 75 டெங்கு பாதிப்பு களும், 27 மஞ்சள் காமாலை பாதிப்பு களும், 7 எலிக்காய்ச்சல் பாதிப்புகளும் பதிவாகியுள்ளன.

அச்சத்தை ஏற்படுத்தும் ‘ஷிகெல்லா’ தொற்று

புதிய அரசு பதவியேற்ற போது வெறும் 5 பேருக்கு மட்டுமே இருந்த ஷிகெல்லா நோய்த்தொற்று, தற்போது 10 மடங்கு அதிகரித்துள்ளது. அதாவது கடந்த 30 நாட்களில் மட்டும் 155 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். ஐந்து பேர் உயிரிழந்துள்ளனர். இந்த ஆண்டு ஏற்பட்டுள்ள இறப்பு எண்ணிக்கை, கடந்த ஆண்டு ஜூன் மாதத்தில் ஏற்பட்ட பருவமழைக் கால நோய்ப்பரவலின் போது நிகழ்ந்த இறப்பு எண்ணிக்கையை விட இரண்டு மடங்குக்கும் அதிகமா கும். பருவமழைக்கு முந்தைய சுகாதார மின்மையால் நோயின் பரவல் தீவிரம டைந்துள்ளது.

மழை நின்ற பிறகுதான் தூய்மைப் பணிகளுக்கான அழைப்பே விடுக் கப்பட்டது. உள்ளாட்சித் துறை தூய்மைப் பணிகளைச் சரியாகச் செய்ய வில்லை என அமைச்சர் கே. முரளிதரன் மீது சுகாதாரத்துறை தரப்பில் குற்றம் சாட்டப்படுகிறது. சுகாதாரத் துறை இயக்குநர் கே. ஜே. ரீனா பழிவாங்கும் விதமாக திடீரென இடமாற்றம் செய்யப்பட்டு, திடீரென வேறொருவர் நியமிக்கப்பட்டதால், தடுப்புப் பணி கள் மிக மோசமான அளவில் பாதிக்கப் பட்டன.