தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

கேரளத்தில் தீவிரமடையும் கனமழை 7 பேர் பலி ; 50 கி.மீ., வேகத்தில் வீசும் காற்று

6 Jun 2026, 9:24 pm
கேரளத்தில்  தீவிரமடையும் கனமழை 7 பேர் பலி ; 50 கி.மீ., வேகத்தில் வீசும் காற்று

கேரளத்தில் தீவிரமடையும் கனமழை 7 பேர் பலி ; 50 கி.மீ., வேகத்தில் வீசும் காற்று

கேரளத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்து வருகிறது. கடந்த 24 மணிநேரத்தில் காசர்சோடு, கண்ணூர், கோழிக்கோடு, வயநாடு, மலப்புரம் மாவட்டங்களில் ரெட் அலர்ட் எச்சரிக்கை யுடன் அதீத அளவில் கனமழை வெளுத்து வாங்கியது.

அதே போல பாலக்காடு, திருச்சூர், இடுக்கி, எர்ணா குளம், கோட்டயம், பத்தனம்திட்டா மாவட்டங்களில் ஆரஞ்சு எச்சரிக்கை யுடன் கனமழை கொட்டித் தீர்த்தது. அதாவது மாநிலம் முழுவதும் கடந்த 24 மணிநேரத்தில் 15 முதல் 20 செ.மீ., அளவிற்கு கனமழை பெய்தது.

இதற்கிடையில் தொடர்ந்து பெய்து வரும் மழையின் காரணமாக வாகன விபத்துக்கள், மரம் சாய்ந்த விபத்து, மின் விபத்து போன்றவற்றில் கேரளம் முழுவதும் 7 பேர் பலியாகி இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

கனமழை நீடிக்கும் இந்நிலையில், அடுத்த 2 நாட்க ளுக்கு மழையின் தீவிரம் அதிகமாக இருக்கும் என்பதால் மக்கள் பாது காப்பாக இருக்க இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள் ளது.

இதுதொடர்பான அறிக்கையில், “ஞாயிறன்று வயநாடு, கோழிக்கோடு, மலப்புரம் மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கையும், காசர்கோடு, கண்ணூர், பாலக்காடு, திருச்சூர் மாவட்டங்க ளுக்கு மஞ்சள் எச்சரிக்கையும், திருவ னந்தபுரம், கொல்லம், ஆலப்புழா, பத்தனம்திட்டா, கோட்டயம், எர்ணாகுளம், இடுக்கி மாவட்டங்க ளுக்கு மஞ்சள் எச்சரிக்கையும் விடுக்கப்படுகிறது.

குறிப்பாக இந்த கனமழை காரணமாக கேரள கடற்கரை, கடற்பரப்பில் 40 முதல் 50 கி.மீ., வேகத்தில் காற்று வீசும். சில நேரங்க ளில் 60 கி.மீ., வேகத்திலும் காற்றின் வேகம் இருக்கும். இதனால் மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம்” என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்ச ரிக்கை விடுத்துள்ளது.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.