மீண்டும் கனமழை அபாயம்கேரளத்தில் பலி எண்ணிக்கை 20ஆக அதிகரிப்பு
yesterday

மீண்டும் கனமழை அபாயம்கேரளத்தில் பலி எண்ணிக்கை 20ஆக அதிகரிப்பு

கனமழையால் உருக்குலைந்துள்ள கேரளத்தில் இயல்புநிலை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதில் மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் நிலைமை மோசமாகியுள்ளது. குறிப்பாக கோட்டயம், பத்தனம்திட்டா, இடுக்கி மாவட்டங்கள் குட்டித்தீவாக மாறியுள்ளது. தேசிய பேரிடர் மீட்புப் படையினர், வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்துள்ள பகுதிகளில் சிக்கித் தவிக்கும் மக்களை பாதுகாப்பாக மீட்பதற்கான அனைத்து நடவடிக்கைகளையும்மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில், வெள்ளம் மற்றும் நிலச்சரிவு போன்ற பேரிடர்கள் காரணமாக கடந்த 3 நாட்களில் மாநிலம் முழுவதும் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 20ஆக உயர்ந்துள்ளது. மேலும் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டு காணாமல் போன 7 பேரைத் தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

கனமழை நீடிக்கும்

ஏற்கெனவே கனமழை வெள்ளத்தால் கேரளத்தின் பல பகுதிகள் வெள்ளத்தில் தத்தளித்து வரும் நிலையில், மாநிலம் முழுவதும் கனமழை நீடிக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம்எச்சரிக்கை விடுத்துள்ளது.

இதுதொடர்பான அறிவிப்பில்,“பத்தனம்திட்டா, கோட்டயம், இடுக்கி, எர்ணாகுளம், கோழிக்கோடு, வயநாடு, கண்ணூர் மற்றும் காசர்கோடு ஆகிய8 மாவட்டங்களுக்கு அடுத்த 30முதல் 48 மணிநேரத்திற்கு கனமழைக்கான சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்படுகிறது. ஆலப்புழா, திருச்சூர், பாலக்காடு மற்றும் மலப்புரம் ஆகிய 4மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கையும், திருவனந்தபுரம் மற்றும் கொல்லம்மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கையும் விடுக்கப்படுகிறது” என அதில் கூறப்பட்டுள்ளது.