கேரளத்தில் ஜூன் 10 வரை கனமழை நீடிக்கும் இந்திய வானிலை மையம் எச்சரிக்கை
5 Jun 2026, 9:08 pm

கேரளத்தில் ஜூன் 10 வரை கனமழை நீடிக்கும் இந்திய வானிலை மையம் எச்சரிக்கை

கேரள மாநிலத்தில் தென் மேற்கு பருவமழை ஜூன் முதல் செப்டம்பர் மாதம் வரையிலான காலக்கட்டத்தில் பெய்யும். ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 1ஆம் தேதி தென்மேற்கு பருவமழை தொடங்கும்.

ஆனால் இந்த ஆண்டு வழக்கத்தைவிட 4 நாட்கள் தாமதமாக ஜூன் 4 அன்று தொடங்கியது.கேரளத்தில் பருவமழை தொடங்கி யதையடுத்து பரவலாக அனைத்து மாவட்டங்களிலும் நல்ல மழை பெய்ய தொடங்கியிருக்கிறது. ஒரு சில மாவட்டங் களில் கனமழை வெளுத்து வாங்கி வருகிறது.

இந்நிலையில், தென்மேற்கு பருவ மழை தொடங்கியதன் காரணமாக கேர ளம் முழுவதும் ஜூன் 10ஆம் தேதி வரை கனமழை தொடரும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள் ளது.

இதுதொடர்பான அறிக்கையில் “ஜூன் 6 மற்றும் 7ஆம் தேதிகளில் கண் ணூர், காசர்கோடு, கோழிக்கோடு, வய நாடு, பாலக்காடு, மலப்புரம், திருச்சூர் ஆகிய 7 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்ச ரிக்கையும், திருவனந்தபுரம், கொல்லம், பத்தினம்திட்டா, ஆலப்புழா, இடுக்கி, கோட்டயம், எர்ணாகுளம் ஆகிய 7 மாவட் டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கையும் விடுக் கப்படுகிறது. இந்த மாவட்டங்களில் ஆறு கள், தாழ்வான பகுதிகளில் வெள்ளப் பெருக்கு ஏற்பட வாய்ப்பு உள்ளது. மலைப் பகுதிகளில் நிலச்சரிவு, மண் சரிவு, சேற்று தழுவல்கள் ஏற்படலாம்.

இத னால் பலத்த மழை எச்சரிக்கை விடுக்கப் பட்டு உள்ள மாவட்டங்களைச் சேர்ந்த மக்கள் எச்சரிக்கையுடனும், கவனமுட னும் இருக்க வேண்டும்.

குறிப்பாக மாநி லம் முழுவதும் 40 முதல் 50 கி.மீ., வேகத்தில் காற்று வீசக்கூடும். கடல், கடற்கரை பகுதி களில் அதைவிட வேகமாக காற்று வீசும்.

கடலுக்கு மீன் பிடிக்க செல்லும் மீன வர்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். இந்த கனமழை எச்சரிக்கை ஜூன் 10 வரை நீடிக்கும்” என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது