தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

நாட்டில் அதிக வருமானம் ஈட்டும் மாநிலமாக உருவெடுத்த கேரளம்! பொருளாதார அறிஞர் அமர்த்தியா சென் பாராட்டு

16 Feb 2026, 2:37 pm
நாட்டில் அதிக வருமானம் ஈட்டும் மாநிலமாக உருவெடுத்த கேரளம்! பொருளாதார அறிஞர் அமர்த்தியா சென் பாராட்டு
<p><strong>நாட்டில் அதிக வருமானம் ஈட்டும் மாநிலமாக உருவெடுத்த கேரளம்! பொருளாதார அறிஞர் அமர்த்தியா சென் பாராட்டு</strong></p> <p>திருவனந்தபுரம், பிப். 16 - இந்தியாவிலேயே அதிக வருமானம் ஈட்டும் &nbsp;மாநிலங்களில் ஒன்றாக கேரளம் உருவெடுத் துள்ளது என்று &lsquo;நோபல்&rsquo; பரிசு பெற்ற பொரு ளாதார அறிஞர் அமர்த்தியா சென் பாராட்டி யுள்ளார். &lsquo;விஷன் 2031&rsquo; சர்வதேச மாநாட்டில் காணொலி வாயிலாக உரையாற்றிய அமர்த் தியா சென், &ldquo;கேரளாவின் கல்வி, சுகாதாரம் மற்றும் சமூக பாதுகாப்புத் துறைகளில் ஏற்பட் டுள்ள வியத்தகு முன்னேற்றங்கள், மாநிலத் தின் வளர்ச்சி நோக்குநிலையின் வெற்றி&rdquo; என்று &nbsp;குறிப்பிட்டார். &nbsp;வறுமை ஒழிப்பில் நாட்டிற்கே வழிகாட்டி வறுமை ஒழிப்பு, ஆயுட்காலம் மற்றும் தனி நபர் வருமானம் ஆகியவற்றில் கேரளம் நாட்டுக்கே முன்னுதாரணமாகத் திகழ்வதாக வும் அவர் சுட்டிக்காட்டினார். 1957-ஆம் ஆண்டு நடந்த முதல் தேர்த லின் உற்சாகத்தை நினைவுகூர்ந்த அவர், &ldquo;அப்போது காலேஜ் ஸ்ட்ரீட்டில் உள்ள காபி ஹவுஸ்களில், கேரளத்தின் இடது அரசியல் பாதையில் மக்களை முன்னேற்ற முடியுமா என்று தீவிர விவாதங்கள் நடந்தன. கேரளம் பொருளாதாரத்தில் பின்தங்கியிருந்ததால், வளர்ச்சிக்கான நிதியைக் கண்டுபிடிக்க முடி யாது என்று பலர் என்னிடம் வாதிட்டனர். ஆனால், &nbsp;கேரளம் இன்று ஒவ்வொரு துறையிலும் முன் னணியில் நிற்கிறது. அந்தப் பழைய சந்தேக வாதிகள் அனைவருக்குமே நான் இப்போது எனது செலவில் காபி பார்ட்டி தரத் தயார். கேர ளத்தின் மனிதவள மேம்பாடு குறித்த எனது எதிர்பார்ப்புகள் தவறாக இல்லை&rdquo; என்றும் அமர்த்தியா சென் பெருமிதத்துடன் கூறினார். மதச்சார்பின்மையை கட்டிக்காக்கும் கேரளம் &ldquo;இந்தியாவின் பல பகுதிகளில் மதச்சார் பின்மை மோசமடைந்துள்ள நிலையில், கேரளத் தில் அதற்கு பெரும் சவால்கள் எதுவும் இல்லை&rdquo; &nbsp;என்று தமது நிம்மதியை பகிர்ந்து கொண்ட அமர்த்தியா சென், &ldquo;நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் மதச்சார்பற்ற மதிப்பீடுகள் தாக்குத லுக்கு உள்ளாகியுள்ளன, ஆனால் கேரளம் பேணிவரும் ஜனநாயக உணர்வு பெரும் நம்பிக்கையை அளிக்கின்றது&rdquo; என்றார். கேரளத்தை உற்றுக் கவனித்த உலகம் &ldquo;நாட்டில் தற்போது குறுகிய மனப்பான்மை கொண்ட அரசியல் திணிக்கப்படும் நிலையில், &nbsp;அதனை வலுவாக எதிர்ப்பதில் தான், இந்தியா வின் எதிர்காலம் இருக்கிறது,&rdquo; என்றும்; பெண்களின் உரிமை மற்றும் சுதந்திரம் தொடர் பான விஷயங்களில், கேரளத்தின் உயர் &nbsp;தரநிலைகளை உலகம் பல பத்தாண்டுகளுக்கு &nbsp;முன்பே கவனித்ததாகவும் அமர்த்தியா சென் &nbsp;சுட்டிக்காட்டினார். உலகின் பல்வேறு பகுதிகளி லிருந்தும் அறிவு மற்றும் கலாச்சாரங்களை வர வேற்று, கேரளம் இந்தியாவின் நுழைவாயி லாகச் செயல்பட்டு வருவதாகவும், மதச்சார் பின்மை மற்றும் பன்முகத்தன்மை, கேரள அடையாளத்தின் ஒரு பகுதியாக இருக்கிறது என்றும் அவர் தெரிவித்தார்.</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.