சிபிஎம் மத்தியக் குழு உறுப்பினர் தாமஸ் ஐசக் குற்றச்சாட்டு எதிரொலி ஞானேஷ் குமாரிடம் விசாரணை நடத்த கேரள அரசு உத்தரவு!
yesterday

சிபிஎம் மத்தியக் குழு உறுப்பினர் தாமஸ் ஐசக் குற்றச்சாட்டு எதிரொலி ஞானேஷ் குமாரிடம் விசாரணை நடத்த கேரள அரசு உத்தரவு!

திருவனந்தபுரம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக் குழு உறுப்பினரும், கேரள மாநிலத்தின் முன்னாள் நிதியமைச்சருமான டாக்டர் தாமஸ் ஐசக், கடந்த வாரம் தனது முகநூல் பக்கத்தில், “கேரளத்தில் பணியாற்றியபோது அரசுக்கு ரூ. 250 கோடி இழப்பு மற்றும் தற்கொலை விவகாரத்தில் சிக்கிய ஞானேஷ் குமார் தலைமைத் தேர்தல் ஆணையரானது எப்படி?” என ஆதாரத்துடன் கேள்வி எழுப்பிக் குற்றம் சாட்டியிருந்தார்.இந்நிலையில், தாமஸ் ஐசக்கின் குற்றச்சாட்டை அடிப்படையாகக் கொண்டு, தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாரிடம் விசாரணை நடத்த லஞ்ச ஒழிப்புத்துறைக்குக் கேரள அரசு உத்தரவிட்டுள்ளது.

டாக்டர் தாமஸ் ஐசக் அளித்த தகவலின்படி, 1988ஆம் ஆண்டு பேட்ச் கேரள கேடர் ஐஏஎஸ் அதிகாரியான ஞானேஷ் குமார், வி.எஸ். அச்சுதானந்தன் (சிபிஎம்) தலைமையிலான ஆட்சிக் காலத்தில் கேரளப்பொதுப்பணித்துறைச் செயலாளராகப் பணியாற்றினார். ‘பேட்டி - பெல்’ (PATI-Bel) நிறுவனத்துடன் தொடர்புடைய மலேசிய ஒப்பந்ததாரரான லீ பீன் சீன், 2006ஆம் ஆண்டு கோலாலம்பூரில் தற்கொலை செய்துகொண்டதைத் தொடர்ந்து ஞானேஷ் குமார் அந்தத் துறையிலிருந்து மாற்றப்பட் டார். பின்னர் ஒன்றிய அரசுப் பணிக்குச் சென்றுவிட்டார். இதனைத் தொடர்ந்து, இந்த வழக்கின் விசாரணையும் கிடப்பில் போடப்பட்டது.

இந்நிலையில், 2006இல் கிடப்பில் போடப்பட்ட ஞானேஷ் குமார் மீதான விசாரணையை மீண்டும் தொடங்கக் கேரள லஞ்ச ஒழிப்புத் துறைக்கு அம்மாநில உள் துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. மேலும், 2006இல் இந்த வழக்கில் நடத் தப்பட்ட விசாரணையின் அனைத்துக் கோப்புகளையும் சமர்ப்பிக்குமாறு கேரள லஞ்ச ஒழிப்புத்துறைக்கு அரசு உத்தரவிட்டுள்ளது.

வாக்காளர் சிறப்புத் தீவிரத் திருத்தத்தில் முறைகேடு நடந்ததாகக் கூறியும், ஞானேஷ் குமார் பதவி விலக வேண்டும் என வலியுறுத்தியும் சிபிஎம் உள்ளிட்ட ‘இந்தியா’ கூட்டணிக் கட்சிகள், மாணவர் அமைப்புகள் மற்றும் ‘கரப்பான் பூச்சி ஜனதா கட்சி’யினர் தொடர்போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இத்தகைய சூழலில், சிபிஎம் தலைமையிலான கேரள அரசு, சிபிஎம் தலைவர் அளித்த தகவலின் அடிப்படையில் பழைய வழக்கின் விசாரணையை மீண்டும் முடுக்கிவிட்டுள்ளதால் ஞானேஷ் குமாருக்குப் கூடுதல் நெருக்கடி அதிகரித்துள்ளது.