முந்தய பக்கம்

கேரள அரசுக்கு எதிராக அணி திரளும் அரசு ஊழியர்கள்

22 Nov 2026, 9:09 pm
கேரள அரசுக்கு எதிராக அணி திரளும் அரசு ஊழியர்கள்
<p><strong>கேரள அரசுக்கு எதிராக அணி திரளும் அரசு ஊழியர்கள்</strong></p><p>காங்கிரஸ் தலைமையிலான கேரள அரசின் அராஜக போக்கை கண்டித்தும் ; ஊதிய மாற்றத்தை உடனடியாக அமல்படுத்த வேண்டும்;நிலுவையில் உள்ள அகவிலைப்படி பாக்கியை வழங்குவதற்கான உத்தரவைச் செயல்படுத்த வேண்டும் ; நியாயமற்ற பணியிட மாற்றங்களை ரத்து செய்ய வேண்டும் ; ‘மெடிசெப்’ மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தில் உள்ள குறைபாடுகளைச் சரிசெய்ய வேண்டும்; பொதுச் சேவைத் துறையைச் சீர்குலைக்கும் நடவடிக்கைகளை நிறுத்த வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சனிக்கிழமை திருவனந்தபுரத்தில் உள்ள தலைமைச் செயலகத்தை முற்றுகையிட்டு அரசு ஊழியர்கள் போராட்டம் நடத்தினர். சுமார் 25,000க்கும் மேற்பட்ட கேரள அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்தப் போராட்டத்தை கேரள எதிர்க்கட்சித் தலைவர் பினராயி விஜயன் தொடங்கி வைத்தார்.</p>
Share
FacebookXWhatsAppTelegram