கேரள காங்கிரஸ் (எம்) கட்சி எல்.டி.எப்-இல் உறுதியாக நிலைத்திருக்கும்: ஸ்டீபன் ஜார்ஜ்
11 May 2026, 10:14 pm

கேரள காங்கிரஸ் (எம்) கட்சி எல்.டி.எப்-இல் உறுதியாக நிலைத்திருக்கும்: ஸ்டீபன் ஜார்ஜ்

கோட்டயம் கேரள காங்கிரஸ் (எம்) இடது ஜன நாயக முன்னணியில் உறுதியாக நிலைத்திருக்கும் என்று அந்த கட்சியின் பொதுச் செயலாளர் ஸ்டீபன் ஜார்ஜ் கூறினார்.

மேலும் அவர் கூறுகையில், என்.டி.ஏ கூட்டணியில் இணைவது குறித்து வழி நடத்தல் குழுவில் விவாதம் நடந்ததாக வரும் செய்தி தவறானது.

அப்படி எந்த விவாதமோ கலந்துரையாடலோ நடைபெறவில்லை.

எந்தக் காரணத்திற்காகவும் எல்.டி.எப்-ஐ விட்டு வெளியேறும் எண்ணம் இல்லை.

அது கட்சியின் செயல்திட்டத்தில் இல்லை என்றும் அவர் கூறினார்.

தேர்தலுக்கு முன்பு சில ஊடகங்களின் உதவியுடன் யு.டி.எப் நடத்திய தவறான தகவல் பிரச்சாரம் எல்.டி.எப்-இன் வாக்கு களைப் பாதித்தது என்று வழிநடத்தல் குழு கூட்டத்திற்குப் பிறகு கேரள காங்கிரஸ் எம் தலைவர் ஜோஸ் கே.மாணி எம்.பி. தெளிவுபடுத்தினார். எல்.டி.எப்-க்கும் ஆர்.எஸ்.எஸ்-க்கும் இடையே ஒரு ஒப்பந்தம் இருப்பதாக அவர்கள் வேண்டுமென்றே தவ றான தகவல்களைப் பரப்பினர்.

இதனால் எல்.டி.எப்-உடன் இருந்த சில சிறுபான்மை யினர் தங்களை விலக்கிக் கொண்டதாகவும் அவர் கூறினார். எல்.டி.எப் அரசின் வளர்ச்சி நிலைப்பாடு குறித்து யாரும் புகார் கூறவில்லை.

ஆனால், மக்களை முழுமையாகச் சென்றடைய முடிந்ததா என்றும் வளர்ச்சிக்கு ஒரு மக்கள் முகத்தைக் கொடுக்க முடிந்ததா என்பதை யும் ஆராய வேண்டும்.

நாங்கள் இந்த பின்ன டைவிலிருந்து மீண்டு வலுவாக முன்னேறு வோம்.

தோல்விக்கான காரணங்களை ஆராய்வதற்காக பொதுக்குழு மாவட்ட மற்றும் தொகுதி அளவில் கூடி ஆராயும்.

முன்னணி மாற்றம் என்ற பேச்சே இல்லை என்றும் ஜோஸ் கே. மாணி கூறினார்.

ஆனாலும், பாஜகவில் இணைவது குறித்து வழிநடத்தல் குழு கூட்டத்தில் விவா திக்கப்பட்டதாகப் போலியான செய்தி ஊட கங்களில் பரப்பப்பட்டது.