கேரள காங்கிரஸ் ஆட்சியில் தலைதூக்கும் சாதியமும் மூடநம்பிக்கையும்!
25 May 2026, 10:14 pm
<p><strong>கேரள காங்கிரஸ் ஆட்சியில் தலைதூக்கும் சாதியமும் மூடநம்பிக்கையும்! </strong></p><p>கடந்த 10 ஆண்டுகால இடதுசாரி ஆட்சியில் சாதிய அடையாளங்களுக்கும் மூடநம்பிக்கைகளுக்கும் கேரளாவில் இடமே இருக்க வில்லை. ஆனால், காங்கிரஸ் கூட்டணி (யுடிஎப்) பதவியேற்ற சில நாட்களிலேயே பழைய பிற்போக்குத்தனம் மீண்டும் தலைதூக்கியுள்ளது. புதிய முதல்வர் பதவியேற் கும்போது தன் பெயரை ‘வடசேரி தாமோதரன் மேனன் சதீசன்’ (வி.டி.சதீசன்) எனச் சாதி வாலை காட்டிப் பிரகடனப்படுத்தியுள் ளார். இதற்குச் சொந்தக் கட்சி யான காங்கிரஸின் மாநில பொதுச்செயலாளர் தீப்தி மேரி வர்கீஸ், பஞ்சாயத்து உறுப்பினர் ஜின்டோ ஜான் உள்ளிட்டோரே முகநூலில் கண்டனம் தெரிவித்துள்ளனர். அதுமட்டுமா? கூட்டுத்தொகை ‘13’ என வரும் எண் கொண்ட அரசு காரை ஓட்ட எந்தவொரு காங்கிரஸ் அமைச்சருக்கும் துணிவில்லை; அது ராசியில் லாத எண்ணாம்! இடதுசாரி ஆட்சியில் இதே 13-ஆம் எண் காரை அமைச்சர்கள் பெரு மையோடு பயன்படுத்தினர் என்பது குறிப்பிடத்தக்கது. பகுத்தறிவு மண்ணில் சாதி யையும் மூடநம்பிக்கையையும் விதைக்கும் காங்கிரஸின் இந்தச் செயல் கேரள மக்களி டையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.</p>
