கேரள முதலமைச்சர் வி.டி.சதீசனின் கூற்று உண்மையல்ல!
31 May 2026, 8:10 pm

கேரள முதலமைச்சர் வி.டி.சதீசனின் கூற்று உண்மையல்ல!

கேரள முன்னாள் முதலமைச்ச ரும், தற்போதைய எதிர்க் கட்சித் தலைவருமான பின ராயி விஜயனின் இல்லத்தில் அமலாக்கத் துறை சோதனை நடத்துவது தனக்குத் தெரியாது என்று முதலமைச்சர் வி.டி. சதீ சன் கூறியதில் உண்மை இல்லை என்பது அம்பலமாகியுள்ளது.

அமலாக்கத்துறையின் வருகை குறித்து மாநிலப் புலனாய்வுத் தலைவர் முதலமைச்சருக்கு அளித்த தினசரி அறிக்கையிலேயே குறிப்பிடப்பட்டி ருந்தது. மேலும், அமலாக்கத்துறையின் நடவடிக்கை சட்டப்பூர்வமானது என்றும், அதில் அரசுக்கு எந்த ஆட்சேபணையும் இல்லை என்றும் வெள்ளியன்று செய்தி யாளர் சந்திப்பில் வி.டி. சதீசன் கூறியதி லிருந்தே இத்தகவல் முதலமைச்சர் அலு வலகத்திற்கு முன்கூட்டியே தெரிந்தி ருந்தது தெளிவாகிறது. இருப்பினும், இந்தத் தகவல் உள்துறை அமைச்சர் ரமேஷ் சென்னிதலாவுக்குத் தெரி விக்கப்படாமல் மூடிமறைக்கப்பட் டுள்ளது.

சட்டங்களைக் கேலி செய்யும் போக்கு

முறையான முதல் தகவல் அறிக்கை கூட இல்லாத, நீதிமன்றத்தால் பலமுறை தள்ளுபடி செய்யப்பட்ட ஒரு விவகா ரத்தில், பினராயி விஜயனின் மகளின் நிறுவனத்தைக் காரணம் காட்டி அம லாக்கத்துறை இந்தச் சோதனையை நடத்தியுள்ளது. 10 நாட்களுக்கு முன்பு வரை மாநில முதலமைச்சராக இருந்த ஒரு மூத்த தலைவரின் வீட்டில் சோதனை நடத்தும்போது மக்கள் போராட்டங்கள் வெடிக்கும் என்பதால், சட்டம் ஒழுங்கைப் பாதுகாக்கக் காவல்துறைக்குத் தகவல் தெரிவிக்க வேண்டியது அவசியமாகும். ஆனால், ‘காவல்துறைக்குத் தெரியாது’ என்று உள்துறை அமைச்சர் ரமேஷ் சென்னிதலா கூறியதிலிருந்து, அவ ருக்குத் தகவல் மறைக்கப் பட்டுள்ளது உறுதியாகிறது.

மோதல் போக்கு ஏற்பட்டால் உள் துறை அமைச்சரைத் தோல்வியுற்றவ ராகச் சித்தரித்து அவமானப்படுத்துவதே முதலமைச்சர் அலுவலகத்தின் நோக்க மாக இருந்ததாகக் கூறப்படுகிறது. எனி னும், சிபிஎம் போராட்டம் ஜனநாயக முறையில் நடைபெற்றதால் எவ்வித சட்டம் ஒழுங்குப் பிரச்சனையும் ஏற்பட வில்லை.

எதிர்க்கட்சிகளை வேட்டையா டவே அமலாக்கத்துறை பயன்படுத்தப் படுகிறது என்ற காங்கிரஸின் தேசியக் கொள்கை தற்போது திருத்தப்பட்டு விட்டதா என்ற செய்தியாளர்களின் கேள் விக்குச் சதீசன் பதிலளிக்க மறுத்து விட்டார். மேலும், சிஎம்ஆர்எல் நிறுவன டைரியில் பணம் பெற்றதாகக் குறிப்பிடப் பட்டுள்ள இருவர் தற்போதைய அமைச்ச ரவையில் உள்ளார்களா என்ற கேள்வி யையும் புறக்கணித்த அவர், அரசியல் தலைவர்கள் நிறுவனங்களிடம் பணம் பெறுவது இயல்பானதுதான் என்று நியா யப்படுத்தினார்.