தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

தீக்கதிர் முக்கிய செய்திகள்

15 May 2026, 10:20 pm
தீக்கதிர் முக்கிய செய்திகள்

கேரள புதிய அரசு பதவியேற்பு விழா: முதல்வர் விஜய்க்கு அழைப்பு

சென்னை: மே 18 ஆம் தேதி நடைபெறவிருக்கும் கேரள முதலமைச்சர் பதவியேற்பு விழாவில் பங்கேற்க தமிழக முதலமைச்சர் விஜய்க்கு கேரள தலைமைச் செயலாளர் ஜெயதிலக் அழைப்பு விடுத்துள்ளார். கேரளாவில் ஏப்ரல் 20 ஆம் தேதி நடந்த சட்டப்பேர வைத் தேர்தலில் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜன நாயக முன்னணி வெற்றி பெற்றது. நீண்ட இழுபறிக்கு பிறகு வி.டி.சதீஷன் முதலமைச்சராக தேர்வு செய்யப்பட்டு, சட்டமன்றக் குழு தலைவராக தேர்வு செய்யப்பட்டார். இந்த பதவியேற்பு விழாவில் காங்கிரஸ் ஆளும் மாநில முதல மைச்சர்கள், மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி ஆகியோரும் பங்கேற்க உள்ளனர்.

பெட்ரோல், டீசல் விலை உயர்வை திரும்பப் பெற முதல்வர் வலியுறுத்தல்

சென்னை: ஒன்றிய பாஜக அரசின் பொதுத் துறை எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை லிட்டர் ஒன்றுக்கு ரூ.3 வீதம் உயர்த்தியிருப்பது ஏற்க முடியாதது என்று முதலமைச்சர் விஜய் கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில், “சர்வ தேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை குறையும் போது அதற்கேற்ப விலையை குறைக்காமல், லாபத்தை மட்டும் எடுத்துக் கொள்ளும் நிறுவனங்களின் நடவடிக் கையை கண்டித்துள்ளார். ஐந்து மாநிலங்களில் தேர்தல் முடிந்தவுடன் இந்த விலை உயர்வு அறிவிக்கப்பட்டிருப்பது வேண்டுமென்றே செய்யப்பட்டது என்றும் குறிப்பிட்டு உள்ளார். இரு சக்கர வாகன ஓட்டிகள், வாடகை வாகனங்களை நம்பி வாழ்பவர்கள் மற்றும் நடுத்தர மக்களின் மாத வரு மானம் இதனால் பாதிக்கப்படும் என்றும், வாடகை உயர்வு மூலம் அத்தியாவசியப் பொருட்களின் விலையும் ஏறும். குறு, சிறு தொழில் நிறுவனங்களின் உற்பத்திச் செலவும் அதிகரிப்பதால் ஏற்றுமதியிலும் மந்த நிலை ஏற்படும். எனவே, இந்த விலை உயர்வை உடனடியாக திரும்பப் பெற வேண்டும்” என ஒன்றிய அரசை வலியுறுத்தியுள்ளார்.

தொழில் முனைவோர் சான்றிதழ் கல்வி சேர்க்கை

சென்னை: தமிழ்நாடு அரசின் குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறையின் கீழ் செயல் படும் தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறு வனம் 2026 ஆம் ஆண்டிற்கான ஓராண்டு தொழில் முனை வோர் சான்றிதழ் படிப்பிற்கான சேர்க்கையை அறிவித் துள்ளது. தமிழ்நாட்டில் தொழில்முனைதல் கலாச்சாரத்தை வளர்க்கவும், கண்டு பிடிப்பாளர்களை ஊக்குவிக்கவும் இந்த நிறுவனம் செயல்பட்டு வருகிறது.

அரசுப் பேருந்துகளில் இலவசப் பயணம்: திருநங்கைகளின் கோரிக்கை

சென்னை: திருநங்கைகள் விழிகள் அமைப்பின் செய லாளர் துர்காஸ்ரீ கூறுகையில், “மகளிர் உரிமைத்தொகை திட்டத்தின் கீழ் திருநங்கைகளுக்கு ரூ.1,000 கிடைத்தது. மேலும் பலர் விண்ண ப்பித்துள்ளனர். ஆட்சி மாற்றத்தால் அந்த விண்ணப்பங்கள் இன்னும் பரிசளிக்கப்படாமல் உள்ளன. விரைவில் பரிசீலனை செய்து திருநங்கைகளுக் கும் மகளிர் உரிமைத்தொகை வழங்க அரசாணை பிறப்பிக்க வேண்டும். மேலும், மகளிர் இலவச பேருந்து சலுகையை திரு நங்கைகளுக்கும் விரிவாக்க வேண்டும். 2019-இல் சென்னை கண்ணகி நகரில் ஒதுக்கப்பட்ட வீடுகளில் குடியிருக்க இயலாத சூழல் உள்ளதால் வேறு இடங்களில் குடியிருப்பு வழங்க வேண்டும். தமிழ்நாட்டில் 22,634 திருநங்கைகள் இருப்பதாகவும், தென் சென்னையில் மட்டும் 1,954 பேர் இருப்பதாகவும், இவர்களில் 40 சதவீதம் பேர் பட்டதாரிகள் என்பதால் அரசு மருத்துவமனை மற்றும் மாநகராட்சி போன்ற இடங்களில் தகுதிக்கேற்ப வேலைவாய்ப்பு வழங்க வேண்டும்” என்றும் அவர் வலியுறுத்தினார்.

கொறடாவாக விஜயபாஸ்கரை அங்கீகரிக்க போட்டி மனு

சென்னை, மே 15 - அதிமுகவில் இரு அணி களாக பிளவு நீடிக்கும் நிலையில், வெள்ளியன்று சி.வி.சண்முகம் தரப்பி னர் சபாநாயகரை நேரில் சந்தித்து சி.விஜயபாஸ்க ரையே கட்சியின் சட்ட மன்றக் கொறடாவாக அங்கீ கரிக்க வேண்டும் என மனு அளித்தனர். திமுக-அதிமுக கூட்டணி பேச்சுவார்த்தை மற்றும் நம்பிக்கை வாக்கெடுப்பில் தவெகவுக்கு ஆதரவாக வாக்களித்ததை அடுத்து அதிமுக ‘எடப்பாடி பழனி சாமி அணி’ என 22 எம்.எல்.ஏக்களும், ‘சி.வி. சண்முகம் அணி’ என 25 எம்.எல்.ஏக்களுமாக பிளவு ஏற்பட்டுள்ளது. வியாழ னன்று எடப்பாடி பழனி சாமி தரப்பு அக்ரி கிருஷ்ண மூர்த்தியை கொறடாவாக அங்கீகரிக்க கோரி மனு அளித்திருந்தது. போட்டியாக வெள்ளி யன்று சி.வி.சண்முகம், சி.விஜயபாஸ்கர், ஆர்.காமராஜ் ஆகியோர் சபா நாயகரை சந்தித்துப் பேசி தங்கள் தரப்பின் கோரிக் கையை வலியுறுத்தினர். இரு தரப்பின் மனுக் களையும் சட்டப்படி பரிசீ லித்து விரைவில் சட்ட மன்றத்திலேயே முடிவை அறிவிப்பதாக சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகர் தெரி வித்திருப்பதாக தகவல்கள் கூறுகின்றன.

717 டாஸ்மாக் கடைகளை மூட அவகாசம் கேட்டு முறையீடு

சென்னை: தமிழ் நாட்டில் 717 டாஸ்மாக் கடைகளை மூட அரசு உத்தரவிட்டிருக்கும் நிலையில், இரண்டு வாரத்திற்குள் அனைத் துக் கடைகளையும் மூடு வது கடினம் என்று தமிழ் நாடு டாஸ்மாக் பார் உரி மையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. திடீரென கடைகள் மூடப்பட்டால் அதனை நம்பி வாழும் ஊழி யர்கள் மற்றும் அவர் களது குடும்பங்களின் வாழ்வாதாரம் பாதிக்கப் படும் என்று சங்கம் எச்சரிக்கிறது. கடை களை மூடவும் மாற்று இடத்திற்கு செல்லவும் முறையான கால அவ காசம் வழங்க வேண்டும் என்று அரசிடம் வேண்டு கோள் விடுக்கப்பட்டு உள்ளது.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.