முந்தய பக்கம்

கேரள முதலமைச்சரின் செயலாளராக முன்னாள் தலைமைத் தேர்தல் அதிகாரி நியமனம்

25 May 2026, 8:57 pm
கேரள முதலமைச்சரின் செயலாளராக முன்னாள் தலைமைத்  தேர்தல் அதிகாரி நியமனம்

கேரள முதலமைச்சரின் செயலாளராக முன்னாள் தலைமைத் தேர்தல் அதிகாரி நியமனம்

சிபிஎம் கடும் கண்டனம்

கேரள மாநிலத்தில் சமீபத்தில் நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் தலைமையில் ஐக்கிய ஜனநாயக முன்னணி (யுடிஎப்) ஆட்சியை கைப்பற்றி யது. முதலமைச்சராக வி.டி.சதீசன் பதவியேற்றுள்ளார். இந்நிலையில், முன்னாள் தலைமைத் தேர்தல் அதிகாரி ரத்தன் கேல்கர், கேரள முதலமைச்சர் வி.டி.சதீசனுக்கு செய லாளராக நியமிக்கப்பட்டது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பாக சிபிஎம் மத்தியக் குழு உறுப்பினர் பி. ராஜீவ் கூறுகையில், “கேரளத்தின் புதிய முதலமைச்சரின் செயலாளராக, அம்மாநிலத்தின் தலை மைத் தேர்தல் அதிகாரி ரத்தன் கேல்கர் நியமிக்கப்பட்டிருப்பது மாநிலத்தில் நடத்தப்பட்ட தேர்தல்களின் நேர்மை, நியாயத்தன்மை மீது சந்தேக நிழலை ஏற்படுத்தியுள்ளது. இதேபோன்ற ஒரு நியமனத்தை அங்குள்ள பாஜக அரசு செய்த போது, மேற்கு வங்கத்தில் ராகுல் காந்தி, ‘பெரிய திருட்டு, பெரிய வெகு மதி’ என்று குறிப்பிட்டிருந்தார். இப்போது காங்கிரஸின் கருத்து என்ன?” என அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

Share
FacebookXWhatsAppTelegram