தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

கேரள முதலமைச்சர் பதவிக்கு கே.சி.வேணுகோபால், வி.டி.சதீசன் இடையே மோதல்

7 May 2026, 8:45 pm
கேரள முதலமைச்சர் பதவிக்கு கே.சி.வேணுகோபால்,  வி.டி.சதீசன் இடையே மோதல்

கேரள முதலமைச்சர் பதவிக்கு கே.சி.வேணுகோபால், வி.டி.சதீசன் இடையே மோதல்

கேரளத்தில் அடுத்த முதல மைச்சர் யார் என்பதில் கடும் போட்டி ஏற்பட்டுள் ளது. மூன்று மேலிட பார்வையாளர் கள் முன்பு நடந்த கருத்துக் கேட்பு கூட்டத்தில் கே.சி.வேணுகோபாலுக்கு பெரும்பான்மை சட்டமன்ற உறுப்பி னர்கள் ஆதரவு தெரிவித்துள்ளதாகவும், அதை ஏற்க முடியாது என சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவராக செயல்பட்ட வி.டி.சதீசனும் அவரது ஆதரவாளர்களும் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

கேரள சட்டமன்றத் தேர்தலில் காங்கி ரஸ் கட்சி தலைமையிலான ஐக்கிய ஜன நாயக முன்னணி வெற்றி பெற்றுள்ளது. முதலமைச்சராக யாரை தேர்வு செய்வது என்பதில் இழுபறி நீடித்து வருகிறது.

இந்நிலையில் காங்கிரஸ் கட்சியின் கேரள பிரிவுக்கு பொறுப்பாளரான தீபா தாஸ் முன்ஷி, பார்வையாளர்களான முகுல் வாஸ்னிக், அஜய் மக்கான் ஆகி யோர் முன்னிலையில் காங்கிரஸ் கட்சியின் சட்டமன்ற உறுப்பினர்கள் 63 பேர் கொண்ட கூட்டம் வியாழனன்று திரு வனந்தபுரத்தில் நடந்தது. இதில் கே.சி. வேணுகோபாலுக்கு 46 சட்டமன்ற உறுப்பினர்களின் ஆதரவு உள்ளதாக வும், வி.டி.சதீசனுக்கு 6 பேரும், முன்னாள் எதிர்க்கட்சி தலைவர் ரமேஷ் சென்னித்த லாவுக்கு 8 பேரும் ஆதரவு தெரிவித்துள் ளனர்.

இதைத்தொடர்ந்து கூட்டணிக் கட்சித் தலைவர்களையும் சந்தித்த மேலிட பார்வையாளர்கள் அவர்களது கருத்து களையும் கேட்டுள்ளனர். இந்த விவரங்க ளை தில்லியில் உள்ள உயர்மட்ட தலைவர்களிடம் தெரிவிக்க உள்ளதாக வும், முடிவை அவர்கள் அறிவிப்பார்கள் எனவும் செய்தியாளர்களிடம் அஜய் மக்கான் கூறினார். இதனிடையே முத லமைச்சர் பதவி அல்லாமல் எந்த அமைச்சர் பொறுப்பையும் ஏற்கப்போவ தில்லை என வி.டி.சதீசன் தெரிவித்துள் ளார். கே.சி.வேணுகோபால் ஆதரவா ளர்களும் சதீசனின் ஆதரவாளர்களும் பல்வேறு இடங்களில் போஸ்டர், பிளக்ஸ் யுத்தம் நடத்தி வருகின்றனர்.

கே.சி.வேணுகோபால் ஏற்கெனவே மாநிலங்களவை உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு ஆலப்புழா தொகுதியில் போட்டியிட்டு மக்களவை உறுப்பினரானார். இப்போது சட்டமன்ற உறுப்பினரானதை தொடர்ந்து எம்.பி., பதவியை ராஜினாமா செய்ய வேண்டிய நிலை உள்ளது. இதுவும் கேரள மக்கள் மத்தியில் விவாதமாகி உள்ளது.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.