கேரளத்தில் தொழிலாளர்களுக்கு எதிராக அரசியல் உள்நோக்கம் கொண்ட நகர்வுகளை ஏற்றுக்கொள்ள முடியாது
9 May 2026, 9:35 pm

கேரளத்தில் தொழிலாளர்களுக்கு எதிராக அரசியல் உள்நோக்கம் கொண்ட நகர்வுகளை ஏற்றுக்கொள்ள முடியாது

திருவனந்தபுரம் ஆட்சி மாற்றம் என்ற பெயரில் தொழிலா ளர்களுக்கு எதிராக மேற்கொள்ளப்படும் அரசியல் உள்நோக்கம் கொண்ட நடவ டிக்கைகள் ஏற்றுக்கொள்ள முடி யாது என்று இந்திய தொழிற்சங்க மையம் (சிஐடியு) கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து சிஐடியு பொ துச் செயலாளர் எளமரம் கரீம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “குடும்ப ஸ்ரீ உள்ளிட்ட முக்கிய திட்டங்களில் பல ஆண்டுகளாக ஒப்பந்தத் தொழிலாளர்களாகப் பணியாற்றி வருபவர்களை, ஐக்கிய ஜனநாயக முன்னணி (யுடிஎப்) அமைப்புகளின் தூண்டு தலின் பேரில் பணிநீக்கம் செய்ய வும், அவர்களின் சம்பளத்தை நிறுத்தி வைக்கவும் மேற்கொள்ளப் படும் முயற்சி ஏற்றுக்கொள்ள முடியாதது.

ஒப்பந்தம் புதுப்பிக்கப்படவில்லை

யுடிஎப் ஆதரவு அமைப்பு ஒன்றின் கடிதத்தின் அடிப்படையில் அரசு ஊழியர்கள் மொத்தமாக இடமாற்றம் செய்யப்பட்டனர். பாரதிய மெடிகோஸ் துறையில் உள்ள ஆயுர்வேத மருத்துவர்கள் மற்றும் சிகிச்சையாளர்களின் பணி, ஒப்பந்தக் காலம் முடிந்த பின்னரும் புதுப்பிக்கப்பட வில்லை. குடும்பஸ்ரீ திட்டத்தில் உள்ள 2,624 ஊழியர்களின் நியம னங்களை சட்டப்படி புதுப்பிக்க வேண்டும் எனத் துறைத் தலை வர்கள் பரிந்துரைத்த போதிலும், நிர்வாகம் அதைத் தடுத்தது. மிக சமீபத்தில், கே டெஸ்க் பிரிவில் உள்ள ஒரு பிரிவு ஊழியர்களின் சம்பளமும் நிறுத்தி வைக்கப் பட்டது.

தொடர்புடைய திட்டங்களின் விதிகளின்படி, ஒப்பந்த முறையின் கீழ் ஒவ்வொரு ஆண்டும் அல்லது மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை நியமனங்கள் புதுப்பிக்கப்படு கின்றன. ஒப்பந்தங்களை உரிய நேரத்தில் புதுப்பிக்க வேண்டும் என்ற பரிந்துரையை உயர்நீதி மன்றமும் ஏற்றுக்கொண்டுள்ளது. நிரந்தரமானதாக இருந்தாலும் சரி, ஒப்பந்த அடிப்படையிலானதாக இருந்தாலும் சரி பணிபுரியும் உரிமை அரசியலமைப்புக்கு உட்பட்டது.

இவை அனைத்தும் அரசியல் உள்நோக்கத்துடன் கையாளப் பட்டால், அதற்குப் பெரும் விலை யைக் கொடுக்க வேண்டியி ருக்கும். பணி நியமனங்கள் புதுப் பிக்கப்படாத குடும்ப ஸ்ரீ பணியாளர் கள், சிஐடியு-வின் ஆதரவுடன் விரைவில் மாவட்ட அலுவலகங்கள் முன்பாக போராட்டத்தைத் தொ டங்குவார்கள்” என அதில் கூறப் பட்டுள்ளது.