தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

குவைத்தில் கேரள முதலமைச்சருக்கு பிரம்மாண்ட வரவேற்பு

8 Nov 2025, 2:42 pm
குவைத்தில் கேரள முதலமைச்சருக்கு பிரம்மாண்ட வரவேற்பு

குவைத்தில் கேரள முதலமைச்சருக்கு பிரம்மாண்ட வரவேற்பு

புலம்பெயர்ந்தோர் சங்கமத்தை  தொடங்கி வைத்து உரை

குவைத் சிட்டி வளைகுடா பயணத்தின் ஒரு பகுதியாக குவைத் வந்த கேரள முதலமைச்சர் பினராயி விஜயனுக்கு அங்குள்ள மலையாளிகள் மறக்க முடியாத வரவேற்பு அளித்தனர். மன்சூரியா அல் அரபி உள்விளை யாட்டு அரங்கில் நடைபெற்ற புலம் பெயர்ந்தோர் சங்கமத்தை முதல மைச்சர்  தொடங்கி வைத்தார்.  அப்போது அவர் பேசுகையில், “உலகம் முழுவதும் உள்ள புலம் பெயர்ந்த மலையாளிகள் தங்கள் உணர்ச்சிகளால் கேரளாவை சுமந்து செல்பவர்கள். வளைகுடா சுற்றுப்பய ணத்தின் ஒரு பகுதியாக வழங்கப்பட்ட அன்பான வரவேற்புகள், கேரளா மீதான புலம்பெயர்ந்தவர்களின் அக்கறை மற்றும் எதிர்பார்ப்புகளின் ஒரு பகுதியாகும். எங்கு சென்றாலும் ஒரே மாதிரியான மேம்பட்ட மலை யாள சமூகங்களைக் காணமுடிகிறது. அந்தப் பட்டியலில் குவைத் முதலிட த்தில் உள்ளது” என அவர் கூறினார். மலையாள மிஷனின் குவைத்தி செயலாளரும், வரவேற்புக் குழுவின் பொது அழைப்பாளருமான ஜே.சஜி இந்த நிகழ்விற்கு தலைமை தாங்கி னார். கேரள அமைச்சர் சஜி செரியன், இந்திய தூதரக துணைத் தலைவர் சஞ்சய் முலுகா, தலைமைச் செயலா ளர் டாக்டர் ஏ.ஜெயதிலக், நோர்கா  ரூட்ஸ் துணைத் தலைவர் எம்.ஏ.யூசுப் அலி மற்றும் ஏற்பாட்டுக் குழுத் தலைவர் டாக்டர் அமீர் அகமது ஆகி யோரும் உரையாற்றினர். மேலும் உலக கேரள சபா செயல் தலைவர் மேத்யூ ஜோசப், போபன் ஜார்ஜ், அல்முல்லா பொது மேலாளர் பிலிப் கோஷி, மெட்ரோ மெடிக்கல் கேர் சிஇஓ முஸ்தபா ஹம்சா உள்ளிட்ட பிரமுகர்கள் கலந்து கொண்டனர். வர வேற்புக் குழு ஒருங்கிணைப்பாளரும், கலா குவைத் பொதுச் செயலாள ருமான டி.வி.ஹிக்மத் வரவேற்றார். உலக கேரள சபா உறுப்பினர் மணி குட்டன் எடக்காட் நன்றி கூறினார். இந்நிகழ்ச்சியில் நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஆயிரக்க ணக்கானோர் கலந்து கொண்டனர். சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள புலம்பெயர்ந்தவர்களுடன் முதல மைச்சர் பினராயி விஜயன் உரையா டுவார். தொடர்ந்து ஞாயிறன்று அபுதாபி சிட்டி கோல்ப் கிளப்பில் நடை பெறும் ‘மலையாளத் திருவிழா’விலும் அவர் பங்கேற்கிறார். முன்னதாக பஹ்ரைன், ஓமன், கத்தார் ஆகிய நாடுகளுக்கான அவரது பயணங்கள் ஏற்கனவே முடிந்துவிட்டன என்பது குறிப்பிடத்தக்கது.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.