தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

கொச்சியில் ரூ. 449 கோடியில்  புற்றுநோய் ஆராய்ச்சி மையம்! கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் திறந்து வைத்தார்

9 Feb 2026, 3:02 pm
கொச்சியில் ரூ. 449 கோடியில்  புற்றுநோய் ஆராய்ச்சி மையம்! கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் திறந்து வைத்தார்
<p><strong>கொச்சியில் ரூ. 449 கோடியில் &nbsp;புற்றுநோய் ஆராய்ச்சி மையம்! கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் திறந்து வைத்தார்</strong></p> <p>கொச்சி, பிப். 9 - கேரள மாநிலம் கொச்சியில் உலகத் தரம் வாய்ந்த புற்றுநோய் சிகிச்சை வசதி களுடன் ரூ. 449 கோடி செலவில் கட்டப் பட்ட புற்றுநோய் ஆராய்ச்சி மையத்தின் (CCRC) புதிய கட்டடத்தை முதலமைச்சர் பினராயி விஜயன் திங்களன்று நாட்டுக்கு அர்ப்பணித்தார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் தலைமையிலான இடது ஜனநாயக முன்னணி அரசு மற்றும் முதலமைச்சர் பினராயி விஜயனின் முன்னெடுப்புகளால் இந்த திட்டம் நிஜமானது. 6.35 லட்சம் சதுர அடி பரப்பளவு கொண்ட இந்த 9 அடுக்குக் கட்டடம் எர்ணாகுளம் அரசு மருத்துவக் கல்லூரி வளாகத்தில் 12.63 ஏக்கரில் கட்டப்பட்டது. &nbsp;16 லிப்ட்கள், அதிநவீன அறுவை சிகிச்சை அரங்குகள், சிக்கலான அறுவை சிகிச்சைகளுக்கான 12 அறு வை சிகிச்சை அரங்குகள், 550 கார்களுக் கான பார்க்கிங் மற்றும் எதிர்கால சாத்தி யக்கூறுகளை எதிர்பார்த்து ரோபோடிக் அறுவை சிகிச்சைக்கான சிறப்பு வசதி உட்பட இங்கு ஏற்படுத்தப்பட்டு உள்ளன. &nbsp;ஆராய்ச்சி நோக்கங்களுக்காக தனிச்சிறப்புடன் 10,000 சதுர அடி இடம் விளாசமாக உள்ளது. 360 படுக்கைகள் கொண்ட இந்த புற்றுநோய் மையத்தில் முதல் கட்டத்தில் 100 படுக்கைகள் அமைக்கப்பட்டுள்ளன. 159 புதிய பணி யிடங்களுக்கும் அரசாங்கம் அனுமதி அளித்துள்ளது. சிறந்த வடிவமைப்பிற் காக &lsquo;எட்ஜ்&rsquo; (EDGE) சான்றிதழைப் பெற்ற கேரளத்தின் முதல் மருத்துவ மனைக் கட்டடம் இதுவாகும்.</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.