முந்தய பக்கம்

தீக்கதிர் முக்கிய செய்திகள்

3 Apr 2026, 5:05 pm
தீக்கதிர் முக்கிய செய்திகள்

கேரள முதலமைச்சர் பினராயி விஜயன்

கேரளம் கடந்த காலங்களில் வெள்ளம் மற்றும் பிற இயற்கைப் பேரிடர்களைச் சந்தித்த போது, மீண்டு வர ஒன்றிய அரசு போதிய நிதி உதவியையோ அல்லது சிறப்புத் திட்டங்களையோ வழங்கவில்லை. மாறாக, கேரளத்திற்கு கிடைக்க வேண்டிய வெளிநாட்டு உதவிகளையும் தடுத்தது. இத்தகைய அநீதிகளுக்கு எதிராகக் யுடிஎப் கட்சிகள் மவுனம் காத்தது ஏன்?

ஆம் ஆத்மி எம்.பி., சஞ்சய் சிங்

நான் பாரதிய ஜனதா கட்சியில் சேருமாறு கட்டாயப்படுத்தப்பட்டேன், சிறையிலும் அடைக்கப்பட்டேன்; ஆனால் நாங்கள் ஒருபோதும் பிரதமர் மோடிக்கும், அவரது சர்வாதிகாரத்திற்கும் தலைவணங்கவில்லை. பாஜகவிற்கு எதிராக போராடுவோம்.

காங்கிரஸ் மூத்த தலைவர் அசோக் கெலாட்

மசோதாக்கள் குறித்து விவாதிக்க ஒன்றிய அரசு அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்ட வேண்டும். மகளிர் இடஒதுக்கீடு மசோதா கொண்டு வருவதற்கு அனைவரும் ஆதரவாக உள்ளனர். ஆனால் பாஜகவினர் ஒவ்வொரு விஷயத்திலும் சர்ச்சையை உருவாக்கவே விரும்புகிறார்கள்.

சிபிஎம் அசாம் மாநிலச் செயலாளர் சுப்ரகாஷ் தாலுக்தர்

அசாமில் ஆளும் பாஜக அரசுக்கு எதிரான விமர்சனங்கள் அடங்கிய சிபிஎம் தேர்தல் பிரச்சார உரையை, அகில இந்திய வானொலி மற்றும் தூர்தர்ஷன் ஆகியவை பெருமளவில் தணிக்கை செய்துள்ளது. முழுமையான வாக்கியங்களும் பத்திகளும் நீக்கப்பட்டுள்ளதால், வாக்காளர்களுக்குச் சொல்ல வந்த செய்தி சிதைக்கப்பட்டுள்ளது. இது ஜனநாயகத்தின் அடிப்படைக்கே எதிரானது.

Share
FacebookXWhatsAppTelegram