ஒன்றிய அரசின் புறக்கணிப்பை முறியடித்து மாற்றுப் பாதையை முன்வைக்கும் கேரள பட்ஜெட்
29 Jan 2026, 3:04 pm

ஒன்றிய அரசின் புறக்கணிப்பை முறியடித்து மாற்றுப் பாதையை முன்வைக்கும் கேரள பட்ஜெட்

திருவனந்தபுரம், ஜன. 29 - கேரள மாநிலத்தின் 2026-27 ஆம் நிதி யாண்டுக்கான பட்ஜெட்டை நிதியமைச்சர் கே.என். பாலகோபால் வியாழனன்று சட்ட மன்றத்தில் தாக்கல் செய்தார். ஒன்றிய அரசின் கடுமையான நிதி நெருக்கடி மற்றும் அரசியல் ரீதியான புறக்கணிப்புகளுக்கு மத்தியிலும், ‘மக்கள் நலன் மற்றும் கட்டமைப்பு மேம்பாடு’ ஆகியவற்றைத் தனது இரு கண் களாகக் கொண்டு ஒரு மாற்று பட்ஜெட்டாக, கேரள பட்ஜெட்டை அவர் முன்வைத்தார். நிதிப் புறக்கணிப்புக்கு எதிரான கண்டனம் பட்ஜெட் உரையைத் தொடங்கிய நிதி யமைச்சர் கே.என். பாலகோபால், கேரளத்தின் மீதான ஒன்றிய அரசின் பொருளாதார அடக்கு முறைக்கு எதிராக மாநில மக்களின் எதிர்ப்புக் குரலைப் பதிவு செய்வதாகக் குறிப்பிட்டார். “வரும் காலத்தில், இந்தியா எதிர்கொள்ளப் போகும் மிகப்பெரிய அச்சுறுத்தல் மாநி லங்களின் நிதி உரிமைகளின் மீதான ஒன்றிய அரசின் அத்துமீறலைத்தான்” என்று எச்சரித்த அவர், மாநிலத்தின் கடன் வரம்பைக் குறைத்தும் ஜிஎஸ்டி இழப்பீடுகளை நிறுத்தியும் கேரளத்தை மூச்சுத் திணறச் செய்ய ஒன்றிய அரசு முயல்வதாகச் சாடினார். ஜிஎஸ்டி பங்கு குறைப்பு மற்றும் மானியங்கள் நிறுத்தம் கார ணமாக கேரளம் இந்த ஆண்டு மட்டும் சுமார் 25 ஆயிரம் கோடி ரூபாய் வருவாயை இழந்துள்ள போதிலும், “மக்கள் நலத்திட்டங்களை எக்காரணம் கொண்டும் இடது ஜனநாயக முன்னணி அரசு கைவிடாது!” என உறுதிபடத் தெரிவித்தார். மாநிலத்தின் வலுவான சொந்த வரி வருவாய் “கேரளம் திவாலாகி விட்டது” என்று எதிர்க்கட்சிகள் பரப்பி வரும் பொய்ப் பிரச்சா ரங்களுக்குப் புள்ளி விவரங்களுடன் நிதியமைச்சர் பதிலடி கொடுத்தார். கடந்த ஐந்து ஆண்டுகளில் மாநிலத்தின் சொந்த வரி வருவாய் 1,27,747 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. முந்தைய ஐக்கிய ஜன நாயக முன்னணி (UDF) ஆட்சியின் சராசரி வரி வருவாயான 47,453 கோடி ரூபாயுடன் ஒப்பிடும்போது, தற்போதைய எல்.டி.எப். அரசின் சராசரி வருவாய் 73,002 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. வரி அல்லாத வருவாயும் கணிசமாக அதிகரித்துள்ளது. நிதி மேலாண்மையில் ஒரு தற்காப்புக் கோட்டையைக் கட்டியுள்ளதன் மூலம் ஒன்றிய அரசின் நெருக்கடிகளைத் தகர்த்து முன்னேறுவதாக அவர் குறிப்பிட்டார். இலவசப் பட்டப்படிப்பு: ஒரு வரலாற்றுச் சாதனை இந்த பட்ஜெட்டின் மிக முக்கிய அம்ச மாக, இந்தியாவில் முதல்முறையாகப் பட்டப்படிப்பு வரை (Degree Education) இல வசக் கல்வியை வழங்கும் மாநிலமாக கேரளா உருவெடுத்துள்ளது. உயர்கல்வி யைத் தடையின்றி அனைவரும் பெறும் வகையில் கொண்டுவரப்பட்டுள்ள இந்தத் திட்டம், இந்தியாவிற்கே ஒரு புதிய கல்வி மாதிரியை முன்வைத்துள்ளது. அறிவுசார் பொருளாதாரத்தை நோக்கிய கேரளத்தின் பயணத்தில் இது ஒரு மைல்கல்லாகக் கருதப்படுகிறது. தமிழகத்தை இணைக்கும் சுரங்கப்பாதை திட்டம் போக்குவரத்துத் துறையில் ஒரு புரட்சிகர மான திட்டமாக, இடுக்கி மாவட்டம் கட்டப் பனையிலிருந்து தமிழ்நாட்டின் தேனி மாவட்டம் வரை 20 கிலோமீட்டர் பயண தூரத்தைக் குறைக்கும் வகையில் புதிய சுரங்கப்பாதை திட்டம் பட்ஜெட்டில் அறி விக்கப்பட்டுள்ளது. மலைப்பாங்கான பகுதி யில் நிலவும் போக்குவரத்துச் சிக்கல் களைத் தீர்க்கும் இந்தத் திட்டத்தின் சாத்தி யக்கூறு ஆய்வுக்காக முதற்கட்டமாக 10 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. மேலும், மாநிலத்தின் சாலைகள் மற்றும் பாலங்கள் மேம்பாட்டிற்காக 1182.43 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. சமூக மறுமலர்ச்சியும் அய்யா வைகுண்டர் நினைவிடமும் கேரளத்தின் சமூக நீதிக் கொள்கையைப் பறைசாற்றும் விதமாக, சமூக மறுமலர்ச்சி க்கு வித்திட்ட அய்யா வைகுண்டசாமிக்குத் திருவனந்தபுரத்தில் 2 கோடி ரூபாய் மதிப்பீட்டில் நினைவிடம் அமைக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைகளுக்காகக் குரல் கொடுத்த அய்யா வைகுண்டர், திருவனந்த புரம் சிறையில் சித்ரவதைகளை அனு பவித்த அந்த இடத்திலேயே இந்த நினை வகம் அமைய உள்ளது. இந்த அறிவிப்பைச் சாமிதோப்பு தலைமைப் பதி பூஜித குரு பால பிரஜாபதி அடிகளார் வரவேற்று, முதலமைச்சர் பினராயி விஜயனுக்குத் தனது நன்றியைத் தெரிவித்துள்ளார். வகுப்புவாதத்திற்கு எதிரான எச்சரிக்கை பட்ஜெட் உரையின் ஒரு பகுதியாக, மதத்தின் பெயரால் மக்களைப் பிளவு படுத்தும் சக்திகள் குறித்து நிதியமைச்சர் கடும் எச்சரிக்கை விடுத்தார். “கேர ளத்தின் ஒற்றுமையை அழிக்க விஷமுள்ள வகுப்புவாதப் பாம்புகள் பதுங்கியிருக்கின் றன” என்று குறிப்பிட்ட அவர், அந்தச் சக்திகளின் மத-தேசியவாதக் கருத்து களுக்குக் கேரளம் ஒருபோதும் இடமளிக் காது என்றும், இடதுசாரிகள் என்பவர்கள் அனைத்து மக்களின் ஒன்றியம் என்றும் தெளிவுபடுத்தினார். முதலமைச்சரின் பாராட்டு பட்ஜெட் குறித்துக் கருத்துத் தெரி வித்த முதலமைச்சர் பினராயி விஜயன், “மாநி லத்தின் விரிவான வளர்ச்சி மற்றும் மக்க ளின் நலனைக் கருத்தில் கொண்ட மக்கள் பட்ஜெட் இது” என்று பாராட்டினார். நவீன மற்றும் வளர்ந்த நடுத்தர வருமானச் சமூக மாக கேரளத்தை மாற்றும் லட்சியத்தை நோக்கி இந்த பட்ஜெட் உறுதியாக நடை போடுவதாக அவர் குறிப்பிட்டார். மூலதன முதலீட்டை அதிகரிப்பதன் மூல மும், உள்கட்டமைப்பை மேம்படுத்துவதன் மூலமும் கேரளப் பொருளாதாரம் புதிய உத்வேகம் பெறும் என அவர் நம்பிக்கை தெரி வித்தார். ஒட்டுமொத்தமாக, ஒன்றிய அரசின் நிதி நெருக்கடிகளைத் துணிச்சலுடன் எதிர்கொண்டு, அதே சமயம் கல்வி, கட்ட மைப்பு மற்றும் சமூக நீதியில் சமரசம் செய்து கொள்ளாத ஒரு ‘கேரள மாடலை’ இந்த பட்ஜெட் உலகிற்குப் பறைசாற்றியுள்ளது.

கேரள பட்ஜெட் 2026 - 27

Vஇலவசக் கல்வி: இந்தியாவிலேயே முதல் முறையாகப் பட்டப்படிப்பு (Degree) வரை இலவசக் கல்வி வழங்கும் மாநிலமாக கேரளம் அறிவிப்பு. V சொந்த வரி வருவாய்: கடந்த 5 ஆண்டு களில் மாநிலத்தின் சொந்த வரி வருவாய் ரூ. 1,27,747 கோடியாக உயர்வு. (சராசரி ஆண்டு வருவாய் ரூ. 73,002 கோடி). V வரி அல்லாத வருவாய்: கூடுதலாக ரூ. 24,898 கோடி வசூலிக்கப்பட்டுள்ளது. V பட்ஜெட் மதிப்பீடு: 2025-26 நிதியாண்டின் மொத்தச் செலவு மதிப்பீடு ரூ. 1,92,456 கோடி. V ஒன்றிய அரசு ஏற்படுத்திய இழப்பு: கடந்த நிதியாண்டில் மட்டும் கேரளாவிற்கு வரவேண்டிய தகுதியான வருமானத்தில் ரூ.17,000 கோடியை ஒன்றிய அரசு குறைத்துள்ளது. V ஜிஎஸ்டி பாதிப்பு: ஜிஎஸ்டி விகிதத் திருத்தம் மற்றும் இழப்பீடு வழங்காததால் கேரளத்திற்கு ரூ. 8,000 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது. V நிதிப்பகிர்வு சரிவு: 10-ஆவது நிதி ஆணை யத்தில் 3.88 சதவீதமாக இருந்த கேரளாவின் பங்கு, 15-ஆவது நிதி ஆணையத்தில் 1.92 சதவீதமாகக் குறைக்கப்பட்டுள்ளது. V தேனி சுரங்கப்பாதை: இடுக்கி - தேனி இடையிலான 20 கி.மீ பயண தூரத்தைக் குறைக்கும் சுரங்கப்பாதை ஆய்வுக்கு ரூ. 10 கோடி ஒதுக்கீடு. V சாலை மேம்பாடு: பொதுப்பணித் துறை சாலைகள் மற்றும் பாலங்களுக்கு ரூ. 1182.43 கோடி நிதி ஒதுக்கீடு. V வளர்ச்சி விகிதம்: ஒன்றிய அரசு நிதி நெருக்கடி கொடுத்தபோதிலும், கேரளாவின் மாநில உற்பத்தி வளர்ச்சி விகிதம் (GSDP) தொடர்ந்து நிலையான உயர்வைச் சந்தித்து வருகிறது. Vகல்வி மற்றும் சுகாதாரம்: மாநிலத்தின் மொத்த பட்ஜெட் ஒதுக்கீட்டில் சுமார் 30 சதவிகிதத்திற்கும் அதிகமான தொகை கல்வி மற்றும் சுகாதாரத் துறைகளுக்கே ஒதுக்கப்பட்டுள்ளது. V உள்ளாட்சி அமைப்பு களுக்கு நிதி: அதிகாரப் பரவலாக்கத்தை உறுதிப்படுத்தும் வகையில், மாநிலத்தின் வருவாயில் கணிசமான பங்கு உள்ளாட்சித் துறைக்கு (Local Bodies) நேரடியாக வழங்கப்படுகிறது. V சமூகப் பாதுகாப்பு ஓய்வூதியம்: கேர ளத்தில் சுமார் 60 லட்சம் பேருக்கு வழங்கப் படும் சமூகப் பாதுகாப்பு ஓய்வூதியத் திட்டத்திற் காக (Social Security Pension) எவ்விதத் தடங்கலும் இன்றி நிதிஉறுதிசெய்யப்பட்டுள்ளது. V விவசாயத் துறை: நெல் விவசாயி களுக்கான ஊக்கத்தொகை மற்றும் விவசாயக் கடன் திட்டங்களுக்காகத் தனி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. V புத்தாக்கத் தொழில் (Startups): இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பை உருவாக்கும் ஸ்டார்ட்-அப் நிறுவனங் களுக்காகவும், டிஜிட்டல் தொழில்நுட்பக் கல்விக்காகவும் கூடுதல் நிதி ஒதுக்கப் பட்டுள்ளது.