தீக்கதிர் முக்கிய செய்திகள்
7 May 2026, 8:40 pm

சிபிஎம் மத்தியக்குழு உறுப்பினர் தாமஸ் ஐசக்

கேரளத்தில் பாஜக 3 சட்டமன்றத் தொகுதிகளை வென்றுள்ள போதிலும், என்.டி.ஏ கூட்டணியின் வாக்கு சதவீதம் 14.2% மட்டுமே. இது 2024 நாடாளுமன்றத் தேர்தலின் 19.24% வாக்கு சதவீதத்தையும், சில மாதங்களுக்கு முன்பு நடந்த உள்ளாட்சித் தேர்தலின் 16% வாக்கு சதவீதத்தையும் விடக் குறைவானதாகும்.

சமாஜ்வாதி தலைவர் அகிலேஷ்

வாக்குரிமை பறிக்கப்படும்போது, வேறு என்ன உரிமைகள் மறுக்கப்படக்கூடும் என்பதைச் சிந்தித்துப் பார்க்கும் சூழல் உருவாகியுள்ளது. வாக்கு பறிப்பு முறைகேடுகளுக்கான தரவுகள் கைவசம் உள்ளன. எங்களிடம் உள்ள வாக்குரிமையில் செய்யப்பட்ட முறைகேடுகள் எவ்வாறு எதிர்பாராத தேர்தல் முடிவுகளுக்கு வழிவகுத்தன என்பதைக் காட்டுகின்றன.

சிவசேனா (உத்தவ்) எம்.பி., அரவிந்த் சாவந்த்

நேற்று பாகிஸ்தான் ஒரு பயங்கரவாத நாடு என்று அழைக்கப்பட்டது; ஆனால் இன்று அமெரிக்கா - ஈரான் போருக்கு மத்தியஸ்தம் செய்யும் அளவிற்கு அந்நாடு பேசப்படுகிறது. நேற்று மோடி ‘விஷ்வகுரு’ என்று அழைக்கப்பட்டார். ஆனால் இன்று அவர் எங்கே நிற்கிறார் என்று தெரியவில்லை.

டிஆர்எஸ் தலைவர் கே. கவிதா

தெலுங்கானா அரசாங்கமும், ராகுல் காந்தியும் கையில் அரசியலமைப்புச் சட்டத்தை ஏந்தியபடி, விவசாய சகோதரர்களிடம் அவர்களின் நிலம் பறிக்கப்படாது என்று மீண்டும், மீண்டும் உறுதி அளித்தனர். ஆனால் தற்போது சுமார் 30,000 ஏக்கர் நிலத்தை கையகப்படுத்த தெலுங்கானா அரசு திட்டமிட்டுள்ளது.