கேரளாவில் பறவைக்காய்ச்சல்: கோவையில் கண்காணிப்பு தீவிரம்
19 minutes before

கேரளாவில் பறவைக்காய்ச்சல்: கோவையில் கண்காணிப்பு தீவிரம்

கோவை, நவ.23-கேரளம் மாநிலத்தில் பறவைக்காய்ச்சல் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளதைத் தொடர்ந்து, கோவை மாவட்ட எல்லையில் உள்ள 12 சோதனைச் சாவடிகளில் வாகனங்களுக்கு கிருமிநாசினி தெளித்தல் மற்றும் கண்காணிப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.கேரளம் மாநிலம், ஆலப்புழா உள்ளிட்ட பகுதிகளில் கடந்த சில நாட்களுக்கு முன்பு பறவைக்

பாதிப்பு கண்டறியப்பட்டது. இதையடுத்து அங்கு நோய்த்தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில், தமிழகத்திற்கு பாதிப்பு பரவாமல் தடுக்கும் வகையில், எல்லையோர மாவட்டங்களில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி, கோவை மாவட்டத்தில் வாளையாறு, வேலந்தாவளம், ஆனைகட்டி உள்ளிட்ட 12 சோதனைச்சாவடிகளில் கால்நடை பராமரிப்புத்துறை சார்பில் தற்காலிக குடில்கள்அமைக்கப்பட்டு கண்காணிப்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன.கேரளாவில் இருந்து வரும் சரக்கு வாகனங்களுக்கு கிருமிநாசினி தெளிக்கப்படுவதுடன், வாகனங்களின் வருகை, புறப்படும் இடம் மற்றும் செல்லும் இடம் உள்ளிட்டவிவரங்களும் சேகரிக்கப்படுகின்றன. குறிப்பாக, கோழிகள் மற்றும் பிற பறவைகளை ஏற்றிவரும் வாகனங்கள் தீவிரமாகக் கண்காணிக்கப்படுகின்றன. நோய்த்தொற்று கண்டறியப்பட்ட பகுதிகளில் இருந்து வாகனங்கள் வருகின்றனவா? என்பதும் ஆய்வு செய்யப்படுகிறது.

அதேபோல், தமிழகத்தில் இருந்து கேரளாவுக்கு செல்லும் சரக்கு வாகனங்களுக்கும் நோய்த்

தொற்று தடுப்பு தொடர்பான பாதுகாப்பு அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டு வருகின்றன.

பறவைக் காய்ச்சல் தமிழகத்திற்குள் பரவுவதை தடுக்கும் நோக்கில், கோவை மாவட்டத்தின் எல்லையோர சோதனைச் சாவடிகளில் கால்நடை பராமரிப்புத் துறையினர் தொடர்ந்து கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.