முந்தய பக்கம்

சீற்றத்துடன் காணப்பட்ட கேரள கடற்கரைகள்

9 Aug 2026, 10:34 pm
சீற்றத்துடன் காணப்பட்ட கேரள கடற்கரைகள்

சீற்றத்துடன் காணப்பட்ட கேரள கடற்கரைகள்

சிறிது இடைவெளிக்குப் பின்பு கேரள மாநிலத்தில் மீண்டும் கனமழை பெய்து வருகிறது. மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் கடந்த ஒருவாரமாக, ஒவ்வொரு நாளும் 100 மி.மீ.க்கும் அதிகமான அளவில் கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. அதே சமயம் கேரள கடற்கரைகள் கடல்சீற்றத்துடன் காணப்பட்டு வருகின்றன. இந்திய தேசிய கடல்சார் தகவல் சேவை மையம்,”திங்களன்று (ஆகஸ்ட் 10) மாலை 5:30 மணி வரை திருவனந்தபுரம், கொல்லம், ஆலப்புழா, திருச்சூர் ஆகிய கடற்கரைப் பகுதிகளில் 1.2 முதல் 1.8 மீட்டர் வரை உயரமான அலைகள் எழுந்து கடல் நீர் கரை பகுதிக்குள் புகுந்து கடல் அரிக்கக் கூடும். தமிழ்நாட்டின் கன்னியாகுமரி கடற்கரையும் இதே போன்ற சீற்றத்தை எதிர்கொளும்” என எச்சரிக்கை விடுத்தது. எனினும் முன்கூட்டியே ஞாயிறன்று மாலை முதல் கேரள கடற்கரைகள் சீற்றத்துடன் காணப்பட்டன.

Share
FacebookXWhatsAppTelegram