தீக்கதிர் முக்கிய செய்திகள்
23 Feb 2026, 5:09 pm

கேரள முதலமைச்சர் பினராயி விஜயன்

2024இல் முண்டக்கை-சூரல்மலை நிலச்சரிவுக்குப் பிறகு, அங்கு கேரள இடது ஜனநாயக முன்னணி அரசு உலகத்தரம் வாய்ந்த ஒரு நகரியத்தை உருவாக்கும் வாக்குறுதியுடன், தீவிரமான மறுவாழ்வுத் திட்டத்தைத் தொடங்கியது. இந்த நகரியத்தின் முதற்கட்டமாக, 178 வீடுகள் பிப்ரவரி 25ஆம் தேதி அர்ப்பணிக்கப்பட உள்ளன.

மூத்த பத்திரிகையாளர் சுஷாந்த் சிங்

மணிப்பூர் பாஜக எம்எல்ஏ உயிரிழக்கும் முன்பு செப்டம்பர் 2025இல் பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதினார். ஆனால் மோடி ஒரு துரும்பைக் கூட எடுத்துப் போடவில்லை. விளம்பரங்களில் மட்டுமே ஆர்வம் காட்டும் ஒரு தலைவரால் ஆட்சிமுறை எப்படிச் சீர்குலையும் என்பதற்கு இதுவே சாட்சி.

காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் சுப்ரியா

ஜனநாயகத்தில் அமைதியான முறையில் போராட்டம் நடத்துவது என்பது அனைவரின் உரிமை. ஆனால், சமரசம் செய்துகொண்ட பிரதமர் மோடி உண்மை வெளிவருவதைக் கண்டு அஞ்சிவிட்டார். அதனால் தான் ஏஐ மாநாட்டில் இளைஞர்களை கைது செய்து வருகிறது அமித் ஷாவின் தில்லி காவல்துறை.

மூத்த பத்திரிகையாளர் பியூஸ் ராய்

பாஜக ஆளும் உத்தரப்பிரதேசத்தின் பரைச் பகுதியில் உள்ள அரசுப் பள்ளி மாணவர்களுக்கு இலவசமாக வழங்கப்பட வேண்டிய, முழு லாரி அளவிலான பாடப்புத்தகங்கள், ஒரு கிலோ 4 ரூபாய் என்ற விலையில் பழைய இரும்புக்கடை வியாபாரியிடம் விற்கப்பட்டுள்ளன. புகார் அளிக்கப்பட்டதையடுத்து, காவல்துறையினர் 13,000-க்கும் மேற்பட்ட புத்தகங்களைப் பறிமுதல் செய்துள்ளனர்.