நவகேரள ஆய்வுக்கு உயர்நீதிமன்ற தடை உச்சநீதிமன்றத்தில் கேரள அரசு மேல்முறையீடு
20 Feb 2026, 2:39 pm
<p><strong>நவகேரள ஆய்வுக்கு உயர்நீதிமன்ற தடை உச்சநீதிமன்றத்தில் கேரள அரசு மேல்முறையீடு</strong></p>
<p>புதுதில்லி நவகேரள ஆய்வுக்குத் தடை விதித்த உயர்நீதிமன்ற தடையை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் கேரள அரசு மேல்முறையீடு மனு தாக்கல் செய்துள்ளது. கேரள அரசு அறிவித்த நலத்திட்டங்கள் தொ டர்பாக மக்கள் மத்தியில் கருத்துகளைக் கேட்டும் வகையில் “நவகேரள ஆய்வு” என்ற பெயரில் ஆய்வு நடந்த மாநில அரசு முடிவு செய்து நடவடிக்கை மேற்கொண்டது. இந்தக் கள ஆய்வு சட்ட விரோதமானது என்றும், இதற்கு நிதி துறையின் அனுமதி பெறவில்லை என்றும், அரசு செலவில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆய்வை நடத்துவதாகவும் கூறி கேரள காங்கிரஸ் மாணவர் அமைப்பான கேஎஸ்யு அம்மாநில உய்ரநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்னர். இந்த மனுவை விசாரித்த கேரள உயர்நீதிமன்றம், நவ கேரள கள ஆய்வு நடத்து வதற்கு மாநில அரசு நிதி துறையிடம் முன் அனுமதி பெறாததால், இந்தக் கள ஆய்வு நடத்த பிப்ரவரி 17ஆம் தேதி தடை விதித்தது. இந்தத் தடையை எதிர்த்து கேரள அரசின் வழக்கறிஞர் சி.கே. சசி உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு மனு தாக்கல் செய்துள்ளார். மேல்முறையீட்டு மனுவில், கேரள அரசு அறிவித்த நலத்திட்டங்கள் குறித்து மக்கள் மத்தியில் கருத்துகளை நவ கேரள ஆய்வு மாநில அரசின் கொள்கைசார்ந்த முடிவாகும். இதுபோன்ற கொள்கைசார்ந்த முடிவில் உயர்நீதிமன்றம் தலையிட்டிருப்பது தவறு. மேலும் மாநில அரசின் நிர்வாகச் செயலுக்குத் தடை விதித்துத் தவறு செய்துள்ளது. மாநில அரசுக்கு அரசியலமைப்புசாசனம் வழங்கி யுள்ள நிதி அதிகாரங்கள் உள்ளிட்டவற்றை உயர்நீதிமன்றம் கருத்தில் கொள்ளாமல் நவ கேரள ஆய்வுக்குத் தடை விதித்துள்ளது. நிதி ஒதுக்கீடு, நிர்வாகக் கொள்கை, உள்ளக அரசு நடைமுறைகள் ஆகியவற்றில் நீதிமன்ற தலையீடு கூடாது என்ற உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை கேரள உயர்நீதிமன்றம் கருத்தில் கொள்ளவில்லை. கேரள அரசு திட்டமிட்டுள்ள நவ கேரள ஆய்வில் எந்தவொரு தவறோ, ஊழலோ, பொதுநிதி கையாடலோ, தனிப்பட்ட ஆதாயமோ கண்டறியப்படாமல் இந்த ஆய்வு க்குக் கேரள உயர்நீதிமன்றம் விதித்துள்ள தடை நிர்வாகச் செயல்பாடுகள் சார்ந்த நீதிமன்ற தீர்ப்புகளுக்கு முரணாக உள்ளது. எனவே, நவ கேரள ஆய்வுக்குத் தடை விதித்த கேரள உயர்நீதிமன்ற உத்தரவை ரத்துச் செய்ய வேண்டும்” என மேல்முறையீடு மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>
