தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

ஆதிக்க சிந்தனைக்கு விழுந்த சம்மட்டி அடி கெம்பனூரில் சிவந்த களமும், வென்ற சமூக நீதியும்!

8 Jun 2026, 10:00 pm
ஆதிக்க சிந்தனைக்கு விழுந்த சம்மட்டி அடி கெம்பனூரில் சிவந்த களமும், வென்ற சமூக நீதியும்!

ஆதிக்க சிந்தனைக்கு விழுந்த சம்மட்டி அடி கெம்பனூரில் சிவந்த களமும், வென்ற சமூக நீதியும்!

நவீன யுகத்திலும் சாதியக் காழ்ப்புணர்ச்சியின் கொடூரக் கரங்கள் எளிய மக்களின் அன்றாட உரிமைகளை எவ்வாறு பறிக்கின்றன என்பதற்கு கோவையின் கெம்பனூர் அண்ணா நகர் பகுதியே சாட்சி யாக நின்றது. அங்கு நீண்ட இடை வெளிக்குப் பிறகு, கடந்த சனியன்று மீண்டும் நுழைந்த அரசு பேருந்து எண் ‘21’, வெறும் வாகனமாக மட்டு மல்லாமல், அப்பட்டமான தீண்டா மைக்கு எதிரான சமூக நீதியின் வெற்றிக் குறியீடாகவே அப்பகுதிக்குள் வலம் வந்தது.

தீண்டாமையின் உக்கிரம்

கோவை தொண்டாமுத்தூர் தொகுதிக்குட்பட்ட, கெம்பனூர் அண்ணா நகர் பகுதிக்கு வழக்கம் போல இயக்கப்பட்டு வந்த அரசு பேருந்து எண் 21, திடீரென ஒருநாள் அண்ணா நகருக்குள் செல்வது நிறுத்தப்பட்டு, கெம்பனூரோடு திருப்பிவிடப்பட்டது. அண்ணா நகர் பகுதிக்கு பேருந்து சென்று வந்தால், அங்கு வாழும் பட்டியலின சமூக மக்கள் பேருந்து இருக்கைகளில் சம மாக அமர்ந்து பயணிப்பார்கள் என்ற சாதியக் காழ்ப்புணர்ச்சியே இந்த பேருந்து நிறுத்தத்திற்குப் பின்னா லிருந்த காரணம் என்பதை அப்பகுதி யினர் உணர்ந்தனர்

இதன் காரணமாக, பள்ளிச் செல்லும் குழந்தைகள், முதியவர்கள், கர்ப்பிணிகள் என ஒட்டுமொத்த அண்ணா நகர் மக்களும் தங்களின் அன்றாடத் தேவைகளுக்காக சுமார் 500 மீட்டர் தூரம் நடந்து கெம்ப னூர் செல்ல வேண்டிய அவல நிலை நீடித்தது. இது குறித்து மாவட்ட ஆட்சியர் உள்ளிட்ட அதிகாரிகளிடம் பொதுமக்கள் பலமுறை மனு அளித்தும், சாதிய ஒடுக்குமுறையைக் கண்டு கொள்ளாமல் நிர்வாகத் தரப்பு மௌனம் சாதித்தது. முந்தைய ஆட்சியாளர்கள் இப்பிரச்சனையை ஒரு தீண்டாமை கொடுமையாகப் பார்க்காமல், சாதாரண பேருந்து போக்குவரத்துப் பிரச்சனையாக மட்டுமே கடந்து செல்ல முயன்றனர். இடையில் ‘21A’ என்ற தனி பேருந்து இயக்கப்பட்டபோது, “எங்களை ஏன் பொதுப் பேருந்தில் அனுமதிக்க மறுக்கிறீர்கள்? இது அப்பட்டமான தீண்டாமை இல்லையா?” என்று அண்ணா நகர் மக்கள் தங்களின் உரிமைக் குரலை அழுத்தமாகப் பதிவு செய்தனர்.

முற்போக்கு இயக்கங்களின் தொடர் போராட்ட களம்

இந்த அநீதியை முதன்முதலில் ஒரு ‘தீண்டாமைப் பிரச்சனை’ என்று அடையாளப்படுத்தி, மாவட்ட நிர்வாகத்தின் கவனத்திற்குக் கொண்டு சென்றது திராவிடர் விடு தலைக் கழகம். அதனைத் தொடர்ந்து, இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் மற்றும் தீண்டாமை ஒழிப்பு முன்னணி உள்ளிட்ட இடதுசாரி, முற்போக்கு அமைப்புகள் இப்போராட்டத்தைக் கையில் எடுத்தன. அண்ணா நகர் மக்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு எதிராக ஆட்சியர் அலுவலக முற்றுகை, தொடர் ஆர்ப்பாட்டங்கள் எனப் பல்வேறு வடிவங்களில் வீரிய மிக்க போராட்டங்கள் களத்தில் முன்னெடுக்கப்பட்டன. சாதிய ஒடுக்கு முறைக்கு எதிராக முற்போக்கு இயக்கங்கள் தொடுத்த சமரசமற்ற இந்தப் போராட்டம் அரசின் கள்ள மௌனத்தை அம்பலப்படுத்தியது.

இந்நிலையில், அண்மையில் தமிழக சமூக நீதித்துறை அமைச்ச ராகப் பொறுப்பேற்ற வன்னியரசு கோவைக்கு வருகை தந்த போது, இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் மற்றும் முற்போக்கு அமைப்புகளின் நிர்வாகிகள் அவரை நேரில் சந்தித்து, கெம்பனூரில் நிலவும் தீண்டாமைப் பிரச்சனை குறித்தும், பேருந்து சேவையின் அவ சியம் குறித்தும் விரிவான கோரிக்கை மனுவை அளித்தனர். மனுவின் தீவிரத்தையும், அதன் பின்னாலிருந்த தீண்டாமைக் கொடுமையையும் உடனடியாகப் புரிந்துகொண்ட அமைச்சர் வன்னி யரசு, எவ்விதத் தாமதமுமின்றி கோவை மாவட்ட ஆட்சியரைத் தொடர்புகொண்டார். அண்ணா நகர் வரை அரசு பேருந்தை இயக்க நடவடிக்கை எடுக்குமாறு அதிரடி உத்தரவைப் பிறப்பித்தார்.

மலர்தூவி வரவேற்ற மக்கள்

அமைச்சரின் அதிரடி உத்தரவைத் தொடர்ந்து, மாவட்ட நிர்வாகமும் போக்குவரத்துத் துறையும் இணைந்து, மீண்டும் அரசு பேருந்து எண் 21-ஐ கெம்பனூரைத் தாண்டி அண்ணா நகர் பகுதி வரை முறைப்படி இயக்கத் தொடங்கின. நெடுங்காலத்திற்குப் பிறகு தங்களது பகுதிக்குள் கம்பீரமாக நுழைந்த அரசு பேருந்தைக் கண்ட அண்ணா நகர் மக்களின் கண்களில் கண்ணீரும், முகத்தில் மகிழ்ச்சியும் ஒருசேரத் தளும்பின. அப்பகுதி மக்கள் பேருந்துக்கு மலர்தூவியும், ஓட்டுநர் மற்றும் நடத்துநருக்கு இனிப்புகள் வழங்கியும் உற்சாகமாக வரவேற்றனர். சமத்துவமும் சமூக நீதியும் நிலைநாட்டப்பட்ட நாளாக கருதி இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினரும் இனிப்புகளை வழங்கி மகிழ்ச்சியை பரிமாறிக்கொண்டனர்.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.