முந்தய பக்கம்

கெலமங்கலம் அருகே போதை பொருள் விற்பனை பெண்கள் ஆவேசம்

2 Nov 2026, 11:20 pm
கெலமங்கலம் அருகே போதை பொருள் விற்பனை பெண்கள் ஆவேசம்

கெலமங்கலம் அருகே போதை பொருள் விற்பனை பெண்கள் ஆவேசம்

கிருஷ்ணகிரி, நவ.2- தேன்கனிக்கோட்டை வட்டம் கெலமங்கலம் அருகே உள்ள குந்து மாரணப்பள்ளி கிராமத்தில் 800க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசிக்கின்றனர். இந்த கிராமத்தை ஒட்டி இரண்டு சிறு கிராமங்களும் உள்ளன.

மூன்று கிராம மக்களும்,மாணவ மாணவிகளும் குந்துமாரணப்பள்ளியில் தான் பேருந்து ஏற,இறங்க வேண்டும். இந்நிலையில், குந்துமாரணப்பள்ளி பேருந்து நிறுத்தம் அருகில் இரண்டு பெண்கள் சட்ட விரோதமாக மதுபானம், சாராயம், விற்பதாகவும், கஞ்சா போன்ற பல போதைப் பொருள்களும் விநி யோகிக்கப்படுவதாகவும் கூறப்படுகிறது. அதனால் பல இளைஞர்கள், இப்பகுதியில் போதை பழக்கத்திற்கு அடிமையாகி வரு கின்றனர்.

போதைக்கு அடிமையான இளை ஞர்கள் ஊருக்குள்ளும்,பேருந்து நிறுத்தம் பகுதியிலும்,சாலை ஓரங்களிலும் ரகளை செய்வது, படுத்து கிடப்பது, சண்டை யிடுவது என பொதுமக்களுக்கு கடும் இடையூறுகளை ஏற்படுத்தி வருகின்றனர்.

குறிப்பாக காலை, மாலை வேலை களில் பள்ளி, கல்லூக்கு செல்லும் மாணவ மாணவியர், வேலைக்கு செல்லும் பெண்கள் ஆகியோர் பேருந்து நிறுத்தத்திற்கு கடும் அச்சத்துடனே வந்து செல்கின்றனர்.

எனவே மாவட்ட ஆட்சியரும், காவல் துறையினரும் தலையிட்டு சட்டவிரோத மது, சாராயம்,போதை பொருள் விற்பனை செய்யப்படுவதை உடனடியாக தடுக்கவேண்டும். போதை ஆசாமிகள் மீதும் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். நடவடிக்கை எடுக்காவிட்டால் போராட்டம் நடத்துவோம் என எச்சரித்துள்ளனர்.

Share
FacebookXWhatsAppTelegram