தீக்கதிர் முக்கிய செய்திகள்
9 May 2026, 9:23 pm

ஆம் ஆத்மி தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால்

மோடி அரசு ஊழலை ஒழிக்க மத்திய முகமைகளைப் பயன்படுத்தாமல், எதிர்க்கட்சிகளை உடைக்கவும், தலைவர்களை பாஜகவில் சேர்க்க மிரட்டவுமே பயன்படுத்துகிறது. தற்போது பஞ்சாப் அமைச்சரை கைது செய்து அமலாக்கத்துறை மூலம் பாஜக ஆம் ஆத்மியை மிரட்டுகிறது. இதற்கெல்லாம் அஞ்ச மாட்டோம்.

சமாஜ்வாதி எம்.பி. டிம்பிள்

சுதந்திரமான, நியாயமான தேர்தலை உறுதி செய்ய வாக்கு எண்ணும் செயல்பாட்டில் வெளிப்படைத்தன்மை அவசியம். அதனால் 2027ஆம் ஆண்டு உத்தரப்பிரதேச சட்டமன்றத் தேர்தலின் போது வாக்கு எண்ணும் மையங்களில் இருந்து நேரடி காட்சிகளை அரசியல் கட்சிகளுடன் தேர்தல் ஆணையம் பகிர்ந்து கொள்ள வேண்டும். முன்பு போல சாக்குப் போக்கு சொல்ல அனுமதிக்க மாட்டோம்.

ரேடியோ ஜாக்கி சயீமா

சமூகத்தில் அதிகரித்து வரும் அநீதி, வன்முறையைத் தூற்றுவதற்குப் பதிலாக அதைப் பெருமையாகக் கருதும் போக்கு, மூடநம்பிக்கைகள் பரவுவது மிக மோசமானது. நாட்டில் குற்றவாளிகள் கொண்டாடப்படுகிறார்கள்; நீதி என்பது ஒரு கனவாகவே மாறிவிட்டது.

தி ஜாமியா டைம்ஸ்

ஒன்றிய உள்துறை இணை அமைச்சர் பண்டி சஞ்சய் குமாரின் மகன் பண்டி பகீரத், 17 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்ததாகக் கூறப்படும் புகாரின் பேரில், போக்சோ சட்டத்தின் கீழ் அவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இன்னும் கைது செய்யப்படவில்லை.