“வினாத்தாள் கசிவு பிரச்சனைக்கு டெலிகிராமை தடை செய்வது தீர்வல்ல”
18 Jun 2026, 9:08 pm

“வினாத்தாள் கசிவு பிரச்சனைக்கு டெலிகிராமை தடை செய்வது தீர்வல்ல”

வினாத்தாள் கசிவு காரணமாக ரத்து செய்யப்பட்ட நீட் தேர்வின் மறுதேர்வு ஜூன் 21 அன்று நடைபெறுகிறது.

இந்த தேர்வையொட்டி வினாத்தாள் கசிவைத் தடுப்பதற்கான ஒரு நடவடிக்கை என்று கூறி, டெலிகிராம் செயலியை ஒன்றிய மோடி அரசு ஜூன் 22 வரை தற்காலி கமாக தடை செய்துள்ளது.

இந்த தடைக்கு டெலிகிராம் நிறுவனமே கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

இந்நிலையில், வினாத்தாள் கசிவுப் பிரச்சனைக்கு செய்திப் பரிமாற்ற தளமான டெலிகிராமை தடை செய்வது தீர்வல்ல என ஆம் ஆத்மி ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவால் குற்றம்சாட்டியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் மேலும் கூறு கையில்,“வினாத்தாள் கசிவு வணிகம் என்பது பல பில்லியன் ரூபாய் மதிப்புடையது.

இத்தகைய நடவடிக்கை கள் மூலம் ஈட்டப்படும் பெரும் தொகை செல்வாக்கு மிக்க மனிதர்களைச் சென்றடைகிறது.

ஆனால் டெலிகிராமை தடை செய்தால் எல்லாம் சரியாகிவிடும் என்று மோடி அரசு நினைக்கிறது. இத்த கைய நடவடிக்கைகள் பிரச்சனையின் மூல காரணத்தை ஒரு போதும் சரி செய்யாது.

இந்த விவகாரத்தைக் கையாள்வதில் அதிகாரிகள் தீவிரமாக இல்லை. இந்த விவகாரத்தில் சீர்திருத் தங்களைக் கோர மக்கள் அனைவரும் ஒன்றிணைய வேண்டும்” என கெஜ்ரி வால் அழைப்பு விடுத்துள்ளார்.