மாநில அளவிலான ‘துளிர்’ வினாடி வினா போட்டி கீழக்கரை ஹமீதியா பெண்கள் பள்ளி முதலிடம்
10 Feb 2026, 4:50 pm
<p><strong>மாநில அளவிலான ‘துளிர்’ வினாடி வினா போட்டி கீழக்கரை ஹமீதியா பெண்கள் பள்ளி முதலிடம்</strong></p>
<p>இராமநாதபுரம், பிப்.9- தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சார்பில் நடைபெற்ற மாநில அளவிலான ‘துளிர்’ வினாடி வினா போட்டி, நெய்வேலி என்.எல்.சி. ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் தமிழ்நாடு அறிவியல் இயக்க மாநில பொதுச் செயலாளர் முகமது பாதுஷா தலைமையில் நடைபெற்றது. 11, 12ஆம் வகுப்பு தமிழ் பிரிவில் கீழக் கரை ஹமீதியா பெண்கள் மேல்நிலைப் பள்ளி மாநில அளவில் முதலிடம் பெற்றது. 9, 10ஆம் வகுப்பு ஆங்கிலப் பிரிவில் இராம நாதபுரம் வேலு மாணிக்கம் மெட்ரிக் பள்ளி மூன்றாம் இடம் பெற்றது. முன்னதாக, நடைபெற்ற மண்டல அள விலான போட்டிகளில், 6, 7, 8ஆம் வகுப்பு தமிழ் பிரிவில் முத்துவயல் ஊராட்சி ஒன் றிய நடுநிலைப்பள்ளி முதலிடத்தையும், சாயல்குடி கே.எஸ்.எஸ்.என். நடுநிலைப் பள்ளி இரண்டாம் இடத்தையும் பெற்றது. 9, 10 ஆம் வகுப்பு தமிழ் பிரிவில் சாயல் குடி அரசு மேல்நிலைப்பள்ளி மூன்றாம் இடம் பெற்றது. 11, 12ஆம் வகுப்பு தமிழ் பிரிவில் கீழக்கரை ஹமீதியா மேல்நிலைப் பள்ளி முதலிடம் பெற்றது. 6, 7, 8 ஆம் வகுப்பு ஆங்கிலப் பிரிவில் இராமநாதபுரம்வேலு மாணிக்கம் மெட்ரிக் பள்ளி மூன்றாம் இடம் பெற்றது. 9, 10 ஆம் வகுப்பு ஆங்கிலப் பிரிவில் இராமநாதபுரம் வேலு மாணிக்கம் மெட்ரிக் பள்ளி முதலிடம் பெற்றது. 11, 12 ஆம் வகுப்பு ஆங்கிலப் பிரிவில் இரண்டாம் இடம் லூயிஸ் லெவேல் மெட்ரிக் பள்ளி இராமநாதபுரம் பெற்றது. மாநில மற்றும் மண்டல அளவில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பாராட்டு சான்றி தழ்கள் மற்றும் கேடயங்கள் அறிவியல் இயக்க மாநில நிர்வாகிகள் மற்றும் சிறப்பு விருந்தினர்களால் வழங்கப்பட்டன. முன்னதாக, இராமநாதபுரம் மாவட்டச் செயலாளர் ஜீவானந்தம் வழிகாட்டலில், துளிர் வினாடி வினா போட்டி மாவட்ட ஒருங்கிணைப்பாளர் கணேசன் ஒருங்கி ணைப்பில், மாவட்ட மகளிர் ஒருங்கி ணைப்பாளர் கல்பனா, மாவட்ட செயற்குழு உறுப்பினர் சுதாகர் ஆகியோர் முன்னெ டுப்பில், 9 பள்ளிகளைச் சேர்ந்த வழிகாட்டி ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் என 35 பேர் வேன் மூலம் போட்டிக்காக அழைத்துச் செல்லப்பட்டனர். போட்டியில் பங்கேற்ற மற்றும் மாநில, மண்டல அளவில் வெற்றி பெற்ற மாண வர்கள் மற்றும் வழிகாட்டி ஆசிரியர்களை அறிவியல் இயக்க மாநில மற்றும் மாவட்ட நிர்வாகிகள் பாராட்டினர்.</p>
<p> </p>
