தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

கீழடி அறிக்கையை அரசியல் காரணம் கூறி மறைப்பது ஏன்?

22 Sept 2026, 10:02 pm
கீழடி அறிக்கையை அரசியல் காரணம் கூறி மறைப்பது ஏன்?

கீழடி அறிக்கையை அரசியல் காரணம் கூறி மறைப்பது ஏன்?

மதுரை, செப். 22 -கீழடி அகழாய்வு அறிக்கை முந்தைய தமிழ்நாடு அரசின் அரசியல் அழுத்தத்தால் எழுதப்பட்டதாக ஒன்றிய கலாச்சாரத்துறை அமைச்சர் கஜேந்திர சிங் செகாவத் சமீபத்தில் அளித்த நேர்காணலில் தெரிவித்திருந்தார்.இதற்குக் கண்டனம் தெரிவித்து மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் செவ்வாயன்று மகபூப்பாளையத்தில் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார்.

அடிப்படைக் கேள்விகள்

இது தீவிரமான குற்றச்சாட்டு எனவும், இதற்கான ஆதாரத்தை அமைச்சர் வெளியிட வேண்டும் எனவும் கோரிய சு.வெங்கடேசன், அமர்நாத் ராமகிருஷ்ணன் கீழடியில் அகழாய்வு மேற்கொண்டபோதும், அவர் இடமாற்றம் செய்யப்பட்டபோதும் அதிமுக ஆட்சிதான் இருந்தது எனவும், அப்படியானால் அந்த அகழாய்வுக்கும் அன்றைய அரசுக்கும் அரசியல் தொடர்பு இருந்ததா என்று கேள்வி எழுப்பினார். அமர்நாத் ராமகிருஷ்ணனே அறிக்கை தயாரிக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை பிறப்பித்த உத்தரவுக்கும் அரசியல் பின்னணி இருப்பதாக ஒன்றிய அரசு கூறுகிறதா என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.

மூன்றாண்டு தாமதம்

அறிக்கையைத் தொல்லியல் துறையிடம் ஒப்படைத்து மூன்று ஆண்டுகள் கடந்துவிட்ட நிலையில், முதலில் காலதாமதம் செய்யப்பட்டதாகவும், பின்னர் ஒன்பது மாதங்களில் வெளியிடுவதாக நீதிமன்றத்தில் கூறியும் அந்தக் கெடுவும் கடந்துவிட்டதாகவும், நாடாளுமன்ற நிலைக்குழுவில் ஆய்வு நடப்பதாகவும், அதன்பிறகு நிபுணர்குழு அமைக்கப்பட்டதாகவும் தொடர்ந்து காரணங்கள் கூறப்பட்டு வருவதாக வெங்கடேசன் சுட்டிக்காட்டினார். நிபுணர் குழு எழுப்பிய கேள்விகளுக்கும் அமர்நாத் ராமகிருஷ்ணன் பதிலளித்துவிட்டதாகக் கூறப்படும் நிலையில், அறிக்கையை வெளியிடுவதுதான் இப்போது ஒன்றிய அரசின் கடமை என்றார்.

அறிவியல் ஆதாரம் வேண்டும்

அறிக்கை சரியென்றால் வெளியிட வேண்டும்; தவறு என்றால் எந்தப் பகுதியில், எந்த அறிவியல் ஆதாரத்தின் அடிப்படையில் தவறு என்பதை வெளிப்படையாகத் தெரிவிக்க வேண்டும் எனவும், அதைச் செய்யாமல் அரசியல் குற்றச்சாட்டு முன்வைப்பது அறிவியல்பூர்வமான பதில் அல்ல எனவும் அவர் தெரிவித்தார். கீழடி ஆய்வு மண்ணடுக்கை மட்டும் அடிப்படையாகக் கொண்டதல்ல; காலக்கணிப்பு, மண்ணடுக்கியல், உலோகவியல், தாவரவியல் உள்ளிட்ட பல்வேறு அறிவியல் ஆய்வுகளின் முடிவுகளை உள்ளடக்கியது எனவும், இவை தவறானவை என்றால் எந்த ஆய்வு நிறுவனம் மறுக்கிறது, எந்தத் தரவு தவறானது என்பதைக் காட்ட வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தினார்.

இந்துத்துவா கோட்பாட்டுக்கு எதிரான உண்மை

கங்கைச் சமவெளி நாகரிகத்திற்கு முன்னரே தமிழ்நாட்டில் செழிப்பான நகரமயமான பண்பாடு இருந்ததற்கான சான்றுகளை கீழடி முன்வைப்பதாகவும், வேதகால நாகரிகமே இந்தியாவின் தொன்மையான நாகரிகம் என்ற பாஜகவின் இந்துத்துவா கோட்பாட்டை இது மறுப்பதால்தான் அறிக்கையை வெளியிட முடியாமல் தொடர்ந்து புதிய காரணங்கள் கூறப்பட்டு வருகிறது எனவும் வெங்கடேசன் விமர்சித்தார். இது தமிழ்நாட்டுக்கும் பிற மாநிலங்களுக்கும் இடையிலான பிரச்சினை அல்ல, இந்தியத் தொல்லியல் வரலாற்றை அறிவியல் அடிப்படையில் ஆய்வு செய்வது தொடர்பான பிரச்சினை என்றும் அவர் தெளிவுபடுத்தினார்.

உடனடியாக வெளியிட வேண்டும்

கீழடி அறிக்கையில் தவறு இருந்தால் அறிவியல் ஆதாரத்துடன் நிரூபிக்க வேண்டும், இல்லையெனில் மூன்று ஆண்டுகளாக வெளியிடாமல் வைக்கப்பட்டுள்ள அறிக்கையை உடனடியாக வெளியிட வேண்டும் என வெங்கடேசன் கோரினார். அறிக்கையைத் தடுத்து நிறுத்துவதன் மூலம் கீழடியின் வரலாற்று உண்மையை மறைக்க முடியாது என்றும் அவர்தெரிவித்தார். செய்தியாளர் சந்திப்பில் சிபிஎம்மதுரை மாநகர் மாவட்டச் செயலாளர் மா.கணேசன், மாநிலக் குழு உறுப்பினர் இரா.விஜயராஜன், மாவட்ட செயற்குழு உறுப்பினர் டி.செல்வராஜ் ஆகியோர் உடனிருந்தனர்.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.