முந்தய பக்கம்

கீழடி திறந்தவெளி அருங்காட்சியகம்  ஜன. 31-இல் முதல்வர் திறந்து வைக்கிறார்!

28 Jan 2026, 2:33 pm
கீழடி திறந்தவெளி அருங்காட்சியகம்  ஜன. 31-இல் முதல்வர் திறந்து வைக்கிறார்!
<p><strong>கீழடி திறந்தவெளி அருங்காட்சியகம் &nbsp;ஜன. 31-இல் முதல்வர் திறந்து வைக்கிறார்!</strong></p> <p>சென்னை, ஜன. 28- சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் ஊராட்சி ஒன்றியம் கீழடியில் அகழாய்வு நடைபெற்ற இடங்களில் அமைக்கப்பட்டுள்ள திறந்தவெளி அருங்காட்சியகத்தை ஜனவரி 31 அன்று முதலமைச்சர் &nbsp;மு.க.ஸ்டாலின் திறந்து வைக்க உள்ளார். இத்தகவலை அமைச்சர் கே.ஆர். பெரியகருப்பன் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார். &ldquo;தமிழர்களின் பழங்கால நாகரிகம், கலாச்சாரத்தை வெளிப்படுத்தும் திறந்தவெளி அருங்காட்சியகம் 5,914 சதுர மீட்டரில், ரூ. 22 கோடி செலவில் அமைக்கப்பட்டு உள்ளது. அதனை முதலமைச்சர் திறந்து வைக்க &nbsp;உள்ளார். இந்தியாவிலேயே திறந்தவெளி அருங்காட்சியகத்தைப் பெற்றிருப்பது தமிழ்நாடு மட்டுமே, குறிப்பாக கீழடி மட்டுமே! என்று அமைச்சர் தெரிவித்தார்.&nbsp;</p>
Share
FacebookXWhatsAppTelegram