கீரப்பாளையத்தில் தொடர் மின்வெட்டு சிபிஎம் போராட்டம்
1 hour before

கீரப்பாளையத்தில் தொடர் மின்வெட்டு சிபிஎம் போராட்டம்

கீரப்பாளையம், செப் 25–சிதம்பரம் அருகே கீரப்பாளையம் பகுதியில் கடந்த 10 நாட்களுக்கும் மேலாக தொடர்ந்து அறிவிக்கப்படாத மின்வெட்டு ஏற்பட்டு வருவதால் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

இதையடுத்து, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் கீரப்பாளையம் மின்வாரிய அலுவலகத்தை முற்றுகையிட்டு, உதவி செயற்பொறியாளரிடம் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது. அதில் கீரப்பாளையம் ஊரகப் பகுதிகளை மின் பகிர்மான முன்னுரிமையில் கடைத்தெரு பகுதிகளு டன் இணைத்து, தொடர் மின்வெட்டு பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு காண வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.

போராட்டத்துக்கு ஒன்றிய செயலாளர் (பொ) கே. முருகன் தலைமை தாங்கினார். மாவட்ட செயற்குழு உறுப்பினர் வி. சுப்ப ராயன், ஒன்றியக்குழு உறுப்பினர்கள் சதீஷ்குமார், ராஜ்குமார், சோமசுந்தரம், விவசாயத் தொழிலாளர் சங்க மாவட்ட துணைத் தலைவர் ஆர். நெடுஞ்சேரலாதன், கிளைச் செயலாளர்கள் மாயவேல், ராஜா உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.

கோரிக்கைகள் குறித்து விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என மின்வாரிய அதிகாரி உறுதியளித்தனர்.