கீழடிக்குப் படையெடுக்கும் மக்கள்!
23 May 2026, 10:43 pm

கீழடிக்குப் படையெடுக்கும் மக்கள்!

வைகை நதிக்கரையில் கண்டெடுக்கப்பட்ட கீழடி அகழாய்வு சான்றுகள், 2500 ஆண்டுகளுக்கு முன்பே தமிழர்கள் உயர்ந்த நகர நாகரிகத்துடனும், எழுத்தறி வுடனும், தொழில்நுட்பத் திறனுடனும் வாழ்ந்துள்ளனர் என்பதை உலகிற்கு எடுத்துக்காட்டி வருகின்றன.

கீழடி அருங்காட்சியகம் மற்றும் திறந்தவெளி அருங்காட்சி யகத்தை நாள்தோறும் சுமார் 2000-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் பார்வையிட்டு வருகின்றனர்.

வார விடுமுறை நாட்களில் இந்த எண்ணிக்கை 3000-ஐத் தாண்டுவதாக அதிகாரிகள் தெரிவிக் கின்றனர்.

ஒன்றிய அரசு தொல்லியல் துறை 2014 முதல் 2017 வரை மூன்று கட்டங்களாக அகழாய்வுகளை மேற்கொண்ட நிலை யில், தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை 2018 முதல் தொடர்ந்து ஆய்வுகளை முன்னெடுத்து வருகிறது.

காந்தவியல், மின் தடுத்திறன், நீரியல் மற்றும் லிடார் தொழில்நுட்ப ஆய்வுகள் மூலம் தேர்வு செய்யப்பட்ட இடங்களில் மேற்கொள்ளப்பட்ட அகழாய் வுகள் பல்வேறு வரலாற்றுச் சான்றுகளை வெளிக்கொணர்ந் துள்ளன.

2600 ஆண்டுக்கு முந்தைய... தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையின் நான்காம் கட்ட அகழாய்வில் கிடைத்த கரிம மாதிரிகளின் ஏஎம்எஸ் காலக்கணக் கீட்டின் அடிப்படையில், தமிழி எழுத்து கி.மு. 580-ஆம் ஆண்டைச் சேர்ந்தது என உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதன் மூலம், 2600 ஆண்டு களுக்கு முன்பே தமிழ்ச் சமூகம் எழுத்தறிவு பெற்ற நாகரிகமாக விளங்கியது தெரியவந்துள்ளது.

கீழடியில் கண்டெடுக்கப்பட்ட தமிழி எழுத்துப் பொறிப்புகள் கொண்ட மண்பாண்டங்கள், கருப்பு-சிவப்பு மண்கலன்கள், சுடுமண் குழாய்கள், உறைக்கிணறுகள், செங்கற்கால்வாய்கள், நெசவுத் தொழிலுக்கான தக்களிகள், செப்பு ஊசிகள், எலும்பு முனை கள் உள்ளிட்டவை சங்ககால தமிழர்களின் தொழில்நுட்ப திறன் மற்றும் நகரமைப்பு அறிவை வெளிப்படுத்துகின்றன.

குறிப்பாக, துணி நெசவு மற்றும் சாயம் ஏற்றும் தொழிலில் தமிழர் கள் மேம்பட்ட திறனுடன் விளங்கியதைச் சுட்டிக்காட்டும் வகை யில், கீழடியில் சாயத் தொட்டிகள், சாயம் சேமிக்கும் கொள் கலன்கள் மற்றும் இண்டிகோ சாயத்தின் எச்சங்கள் கண்டறியப் பட்டுள்ளன.

அதேபோல், 1100 டிகிரி செல்சியஸ் வெப்பத்தில் தயாரிக்கப்பட்ட கருப்பு-சிவப்பு மண்கலன்கள் தமிழர்களின் மேம் பட்ட குயவர் தொழில்நுட்பத்திற்குச் சான்றாகத் திகழ்கின்றன.

மேலும், கீழடியில் இதுவரை 1500-க்கும் மேற்பட்ட குறியீ டுகள் பொறிக்கப்பட்ட மண்பாண்டங்களும், 60-க்கும் மேற்பட்ட தமிழி எழுத்துப் பொறிக்கப்பட்ட பானை ஓடுகளும் கிடைத் துள்ளன.

டெக்கான் கல்லூரி, அகர்கர் ஆய்வு நிறுவனம், பீர்பால் சகானி நிறுவனம், மதுரை காமராஜர் பல்கலைக்கழகம், இந்திய தொழில்நுட்பக் கழகம் உள்ளிட்ட பல்வேறு ஆய்வு நிறுவனங் களுடன் இணைந்து மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகள் கீழடியின் பன்முகத்தன்மையை உறுதிப்படுத்தியுள்ளன.

பேருந்து வசதி... விரிவுரையாளர்கள்... கீழடி அருங்காட்சியகத்தை பார்வையிட வரும் மக்கள், “இரும் புக் காலம், செம்புக் காலம் என வரலாற்றை பிரித்துக் கூறினா லும், கீழடியில் இரண்டும் இணைந்து காணப்படுவது வியப்பளிக் கிறது.

உருவ வழிபாடு அல்லது மத அடையாளங்கள் இல்லாமல் மக்கள் ஒற்றுமையுடன் வாழ்ந்த சமூகமாக கீழடி நாகரிகம் இருந்துள் ளது என்பது மிகவும் ஆச்சரியமாக உள்ளது” எனக் கருத்து தெரிவிக் கின்றனர்.

இங்கு பணிபுரியும் ஊழியர்கள் கூறுகையில், “கீழடி அருங் காட்சியகத்திற்கு நாளுக்கு நாள் மக்கள் வருகை அதிகரித்து வருகி றது.

மதுரை பெரியார் பேருந்து நிலையம், மாட்டுத்தாவணி பேருந்து நிலையம் மற்றும் சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் பகுதிகளில் இருந்து நேரடி பேருந்து வசதிகள் ஏற்படுத்தப்பட்டால் பொதுமக் களுக்கு பெரிதும் உதவியாக இருக்கும்.

மேலும், தற்போது தகவல் பலகைகள் வைக்கப்பட்டிருந்தாலும், விரிவுரையாளர்கள் நியமிக் கப்பட்டால் வரலாற்றுச் செய்திகளை மக்களுக்கு இன்னும் தெளிவாக எடுத்துரைக்க முடியும்” என்றனர்.

தமிழர் வரலாறு, நகர நாகரிகம், அறிவியல் மற்றும் சமூக ஒற்றுமையின் அடையாளமாக விளங்கும் கீழடி, உலக அரங் கில் தமிழர்களின் தொன்மையையும் பெருமையையும் பறை சாற்றும் வரலாற்று சின்னமாகத் திகழ்கிறது.