முந்தய பக்கம்

கீழடியில் குறுகிய வாய் கொண்ட சுடுமண் பானை கண்டெடுப்பு!

19 Apr 2026, 12:26 pm
கீழடியில் குறுகிய வாய் கொண்ட சுடுமண் பானை கண்டெடுப்பு!

சிவகங்கை மாவட்டம் கீழடியில் நடைபெற்று வரும் 11-ஆம் கட்ட அகழாய்வில் வித்தியாசமான வடிவில் குறுகிய வாய் கொண்ட சுடுமண் பானை கண்டெடுக்கப்பட்டுள்ளது.

சிவகங்கை மாவட்டம் கீழடியில் கடந்த 2014 ஆம் ஆண்டு முதல் அகழாய்வுப் பணிகள் நடைபெற்று வருகின்றன. கீழடியில் இதுவரை நடைபெற்ற 10 கட்ட அகழாய்வுகளில், சிறிய செங்கல் கட்டுமானம், கண்ணாடி பாசி மணிகள், மீன் உருவம் பொறிக்கப்பட்ட பானை ஓடுகள், யானை தந்தத்தால் ஆன பகடைக்காய்கள், உலோகப் பொருள்கள், வட்டச் சில்லுகள் என சுமார் 20,000-க்கும் மேற்பட்ட தொல்பொருட்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.

இதை தொடர்ந்து, தற்போது 11ஆம் கட்ட அகழாய்வு நடைபெற்று வருகிறது. இதில், வித்தியாசமான வடிவில் குறுகிய வாய் கொண்ட சுடுமண் பானை கண்டெடுக்கப்பட்டுள்ளது.

சிவப்பு நிற மூடியுடன் கூடிய பானை, கெண்டி மூக்கு பானை என அடுத்தடுத்து பல விதமான பானைகள் அகழாய்வில் கிடைத்தாலும் தற்போது கிடைத்துள்ள பானை அதில் இருந்து வித்தியாசமான வடிவத்தில் உள்ளதாக கருதப்படுகிறது.

Share
FacebookXWhatsAppTelegram