முந்தய பக்கம்

தோழர் கே.சி.கருணாகரன் நினைவு தினம் அனுசரிப்பு

10 Oct 2026, 3:10 am
தோழர் கே.சி.கருணாகரன் நினைவு தினம் அனுசரிப்பு
<p><strong>தோழர் கே.சி.கருணாகரன் நினைவு தினம் அனுசரிப்பு</strong></p><p>கோவை, அக்.9–மார்க்சிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான தோழர் கே.சி.கருணாகரனின் ஆறாம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு மார்க்சிஸ்ட் கட்சியின்கோவை மாவட்டக்குழு அலுவலகத்தில் வெள்ளியன்று நடைபெற்றது.கட்சியின் மாவட்டச் செயலாளர் சி.பத்மநாபன் தலைமையில் நடைபெற்றநினைவேந்தல் நிகழ்வில், மாவட்டசெயற்குழு உறுப்பினர் வி.இராமமூர்த்தி உள்ளிட்டோர் உரையாற்றினர். </p><p>மார்க்சிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர், சட்டமன்ற உறுப்பினர், வாலிபர்சங்கத்தின் முதல் மாநில தலைவர் என பல்வேறு பொறுப்புகளின் திறம்பட பணியாற்றிய தோழர் கே.சி.கருணாகரன். மின்வாரிய தொழிலாளியாக பணியாற்றி, மார்க்சிஸ்ட் கட்சியின் மறைந்த மூத்த தலைவர் கே.ரமணியின் வழிகாட்டுதலோடு மின் ஊழியர்களை திரட்டி சங்கம் அமைக்கும் பணியில்அர்ப்பணிப்பு மிக்க பணியாற்றியது குறித்த நினைவுகளை தலைவர்கள் பகிர்ந்து கொண்டனர். முன்னதாக, கே.சி.கருணாகரனின் உருவப்படத்திற்கு மாலை அணிவித்து, மலர்தூவி அஞ்சலி செலுத்தினர்.நிகழ்வில், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் கே.மனோகரன், கே.எஸ்.கனகராஜ், என்.ஆர். முருகேசன், வி.ஆர்.பழனிச்சாமி, என்.ஆறுச்சாமி, தீக்கதிர் கோவை பதிப்பு பொது மேலாளர் எஸ்.ஏ. மாணிக்கம், கே.சி.கே அவர்களின் மகன் மகேஷ், மகள் செம்மலர் மற்றும் மாவட்டக்குழு உறுப்பினர்கள் உள்ளிட்ட திரளானோர் பங்கேற்றனர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram