தீக்கதிர் விரைவு செய்திகள்
yesterday

தீக்கதிர் விரைவு செய்திகள்

காசிரங்கா விபத்து: பலி எண்ணிக்கை

27 ஆக உயர்வுஅசாம் மாநிலத்தின் கோலாகாட் மாவட்டம் காசிரங்கா தேசிய பூங்கா அருகே உள்ள ரோங்கஜான் தேயிலை எஸ்டேட் பகுதியில் (தேசிய நெடுஞ்சாலை 715) வெள்ளிக் கிழமை மதியம் 40 பேர் பயணித்தடெம்போ வேன் மீது கண்டெய்னர் லாரி மோதி பயங்கர விபத்து ஏற்பட்டது. இந்த கோர விபத்தில் சம்பவ இடத்திலேயே 23 பேர் உயிரிழந்தனர். 27 பேர் காயமடைந்துள்ளனர். அதில் படுகாயமடைந்த 20க்கும் மேற்பட்டோர் ஜோர்ஹாட் மருத் துவமனையில் மேல்சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.

இந்நிலையில், வெள்ளிக்கிழமை இரவு முதல் சனிக்கிழமை காலை ஜோர் ஹட் மருத்துவமனையில் சிகிச்சைபெற்று வந்த மேலும் 4 பேர் அடுத்தடுத்து உயிரிழந்தனர். இதன்மூலம் பலி எண்ணிக்கை 27 ஆக அதிகரித்துள்ளது. பலியான 27 பேரில் பெரும்பாலானோர் கல்லூரி மாணவர்கள் ஆவர். அதில் 2 பெண்களும் அடங்குவர்.

இடது ஜனநாயக முன்னணி அரசாங்கம் கட்டிய கோழஞ்சேரி பாலத்திற்கு உரிமை கோரும் யுடிஎப்

கேரள மாநிலம் பத்தனம்திட்டா மாவட்டத்தில் உள்ளது ஆரன் முளா சட்டப்பேரவைத் தொகுதி. இந்தத் தொகுதிக்கு உட்பட்ட கோழஞ்சேரியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலைமையிலான முந்தைய இடது ஜனநாயக முன்னணி (எல்டிஎப்) அரசு பாலம் ஒன்றைக் கட்டியது. இந்தப் பாலத்தைக் கட்ட அனுமதி, நிதி ஒதுக்கீடு,ஆரம்ப மற்றும் இறுதிக்கட்டப் பணிகள் என அனைத்தையும் பினராயி விஜயனின் எல்டிஎப் அரசே மேற்கொண்டது.ஆனால், தற்போது ஆட்சியில் உள்ள காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணி அரசோ,“நாங்கள்தான் இந்தப் பாலத்தைக் கட்டினோம்” என உரிமை கொண்டாடி வருகிறது. இதுதொடர்பாக ஆரன்முளாஎம்எல்ஏ அபின் வர்க்கி (காங்கிரஸ்) கூறுகையில், “பாலத்திற்கான ஆரம்பகட்ட நிதி ஒதுக்கீடு 2011–2016 காலகட்டத் தில் ஆட்சியிலிருந்த யுடிஎப் அரசாங்கத் தின் போது செய்யப்பட்டது. அதனால் பாலத்தின் உரிமை எங்களுக்கு மட்டுமே” என்று கூறியுள்ளார்.

வீணா ஜார்ஜ் பதிலடி

அபின் வர்க்கியின் கூற்றுக்கு ஆரன் முளா முன்னாள் எம்எல்ஏவான வீணா ஜார்ஜ் (சிபிஎம்) பதிலடி கொடுத்துள் ளார். இதுதொடர்பாக முன்னாள் அமைச்சர் வீணா ஜார்ஜ் கூறுகையில்,”கோழஞ்சேரி பாலத் திட்டத்திற்கு அனுமதி பெறுவதற்கும், பணிகளை முழுமையாக முடிப்பதற்கும் நானும், முந்தைய இடது ஜனநாயக முன்னணி அரசும் தான் முன்முயற்சி எடுத்தோம். அதனால் பாலத்தின் உரிமையில் மாற்றம் கிடையாது” என அவர் கூறினார்.சட்டப்பேரவைத் தேர்தலுக்கு முன்னதாக இந்த ஆண்டின் தொடக்கத்தில் கோழஞ்சேரி பாலத்திற்கான அணுகுசாலையை வீணா ஜார்ஜ் திறந்து வைத்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

ஜம்மு-காஷ்மீர், லடாக்கில் அடுத்தடுத்து 4 நிலநடுக்கங்கள்

இமயமலைச் சாரலில் அமைந் துள்ள ஜம்மு-காஷ்மீர் மற்றும் லடாக் யூனியன் பிரதேசங்களில் சனிக்கிழமை 11 மணி நேர இடைவெளியில் ரிக்டர் அளவுகோலில் 2.9 முதல் 3.9 வரை அடுத்தடுத்து 4 முறை நிலநடுக்கங் கள் ஏற்பட்டுள்ளதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக தேசிய நில அதிர்வு மையம் தனது டுவிட்டர் எக்ஸ் பக்கத் தில் வெளியிட்டுள்ள தகவலின்படி,“இந்த நான்கு நில அதிர்வுகளில் மூன்று ஜம்மு-காஷ்மீரின் செனாப் பள்ளத்தாக்கு பகுதியிலும், ஒன்று லடாக் யூனி

யன் பிரதேசத்தின் லே பகுதியிலும் பதிவாகியுள்ளன” என அதில் கூறப்பட்டுள் ளது. நிலநடுக்கம் ஏற்பட்ட பகுதிகளில் உயிர்ச்சேதமோ அல்லது பொருட் சேதமோ ஏற்பட்டதாக எந்தத் தகவலும் இல்லை என ஜம்மு-காஷ்மீர், லடாக் யூனியன் பிரதேச காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். எனினும் ஒரே நாளில் 4 நிலநடுக்கங்கள் ஏற்பட்டதால் ஜம்மு-காஷ்மீர், லடாக்கில் பதற்றமான சூழல்நிலவி வருகிறது.