நீங்கள் தான் தேசத்தின் உயிர் ! நம்பிக்கை! எதிர்காலம்! - ஞா.சத்தீஸ்வரன்
6 Jun 2026, 8:20 pm

நீங்கள் தான் தேசத்தின் உயிர் ! நம்பிக்கை! எதிர்காலம்! - ஞா.சத்தீஸ்வரன்

காஜி நஜ்ரூல் இஸ்லாம் கவிஞர், சிறுகதை எழுத்தாளர், பத்திரிகையாளர், பாடலாசிரியர், இசையமைப்பாளர் என பன்முகத்தன்மை வாய்ந்தவர். வங்கதேசத்தின் தேசியக்கவி என்ற பெருமைக்கு உரியவர் 1920-இல் தாஷ்கண்ட் நகரில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி துவங்கப்பட்டாலும் இந்தியாவில் உடனடியாக இயங்கவில்லை. சென்னை, மும்பை, கொல்கத்தா நகரங்களில் தொழிலாளர் விவசாயிகள் கட்சி என்று அமைப்பு துவங்கப்பட்டு செயல்பட்டுவந்தது. சென்னையில் சிங்காரவேலர், தொழிலாளர் விவசாயிகள் கட்சிக்காக தொழிலாளன் எனும் வாரஏட்டையும் ‘லேபர் கிசான் கெஜட்’ எனும் ஆங்கில மாதமிருமுறை பத்திரிகையையும் துவக்கினார். அதுபோல் கொல்கத்தாவில் முசாபர் அகமது தொழிலாளர் விவசாயிகள் கட்சியை துவங்கியிருந்தார். முன்பு அதன் பெயர் லேபர் சுயராஜ்யக் கட்சி. அதற்காகத் துவக்கப்பட்ட பத்திரிகை தான் லாங்கல் வாரஏடு. அதில் காஜி நஜ்ரூல் இஸ்லாம் ஆசிரியராகப் பணியாற்றினார். அவர் இந்துக் கடவுளான காளியைப் பற்றியும் கவிதைகள் எழுதினார். அவரது துணைவியார் பிரமிளா தேவி, பிரம்ம சமாஜம் - அமைப்பைச் சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. நஜ்ரூல் முற்போக்காளர், புரட்சியாளர், கம்யூனிஸ்ட். நூறு ஆண்டுகளுக்கு முன்னால் (1926) அவர் எழுதிய கடிதம் இது

விவசாயிகள் தொழிலாளர்கள் சங்கத்தோழர்களுக்கு வங்கத்தின் புரட்சிக் கவிஞர் காஜிநஜ்ரூல் இஸ்லாம் எழுதிய கடிதம்

என் அன்பிற்கினிய மய்மன்சிங் பகுதியின் விவசாயிகள் மற்றும் தொழிலாளர் சகோதரர்களே,

என் நெஞ்சார்ந்த வணக்கங்களையும் வாழ்த்துகளை யும் ஏற்றுக்கொள்ளுங்கள். உங்களிடையே வர வேண்டும் என்ற ஆழ்ந்த விருப்பம் எனக்கிருந்தது. உங்களின் இந்தப் புத்தெழுச்சியின் மத்தியில் என்னை நான் புனிதப்படுத்திக் கொண்டு பாக்கியவானாக வேண்டும் என நினைத்தேன். ஆனால், விதிஅதற்குமாறாகஇருந்ததால்எனது அந்த ஆசை நிறைவேறவில்லை. என் உடல் இன்னமும் மிகவும் பலவீனமாக உள்ளது;ஓரிடத்திலிருந்து மற்றோர் இடத் திற்குச் செல்லும் சக்தியே எனக்கில்லை. எனது இந்த விருப்பமற்ற இயலாமையை நீங்கள் அனைவரும் பொறுத்துக்கொள்வீர்கள் என நம்புகிறேன்.

இந்த மய்மன்சிங் எனக்குப் புதிதல்ல. இந்த மய்மன்சிங் மாவட்டத்திடம் நான் அளவற்ற கடன்பட்டவன். எனது பால்ய காலத்தின் பல நாட்கள் இம்மண்ணில்தான் கழிந் தன. இங்கே தங்கி சில காலம் கல்வியும் கற்றேன். அந்த இனிய நினைவுகள் இன்னும் என் மனதில் ஒளிவீசி நிற்கின்றன.

என் சிறுவயது அறிந்த இந்தப்பூமியின் புனித மண் ணைத் தலைமேல் சுமந்து பாக்கியவானாக வேண்டும் என்றும், மய்மன்சிங் மக்களின் பெருந்தன்மைமிக்க இதயத்தின் தொட்டிலால் என் இரும்பு மனதைப் பொன்னாக மாற்றிக்கொள்ள வேண்டும் என்றும் மிகவும் ஆசைப்பட்டேன். ஆனால் அது நிகழவில்லை - இது எனது துரதிர்ஷ்டம்! எல்லாம் வல்ல அல்லாஹ் அருள் செய்து எனக்கு மீண்டும் உடல்நலத்தைக் கொடுத்தால், உங்களின் கஃபர்காவ் நிகில் பங்கிய பிரஜாசம் மேள னத்தில் (மாநில மாநாட்டில்) கலந்து கொண்டு உங்களை நேரில் சந்திக்கும் நற்பேறு எனக்குக் கிடைக்கும்.

ங்கள்தான் தேசத்தின் உயிர், தேசத்தின் நம்பிக்கை, தேசத்தின் எதிர்காலம். மண்ணின் மீது கொண்ட அன்பு உங்கள் இதயங்களின்ஒவ்வொருமூலையையும் நிரப்பி யுள்ளது. நீங்கள் தான் இந்தமண்ணின் உண்மையான பிள்ளைகள். வெயிலில் கருகியும் மழையில் நனைந்தும், பகல் இரவு பாராமல் படைப்பின் முதல் நாளிலிருந்தே இந்த மண்ணுலகை அன்புக் குழந்தையைப் போல நீங்கள் தான் சீராட்டி வளர்த்துப் பாதுகாத்து வந்தீர்கள், பாது காத்து வருகிறீர்கள், பாதுகாப்பீர்கள். உங்கள் நிலத்தில் இருந்து ஒரு பிடி மண்ணையா ரேனும் எடுக்க வந்தால்கூட, அதற்காக நீங்கள் உங்கள் தலையை கொடுக்கவும், அவர்களது தலையை எடுக் கவும் தயங்க மாட்டீர்கள். இவ்வளவு அன்பில் நனைந்த மண், இவ்வளவு இரத்தத்தில் செழித்த பச்சை வயல்கள் - என் விவசாய சகோதரர்களைத் தவிர இதற்கு வேறு உரிமையாளர் யாருமில்லை.

என் இந்த விவசாயச் சகோதரர்களின் அழைப்புக்கே மழைக்கால வானம் மேகத்தால் நிரம்புகிறது.அவர்களது நெஞ்சத்தின் பாசவெள்ளத்தைப் போலவே நிலங்களும் குளங்களும் நிறைந்து வழிகின்றன. எனது சகோதரர்களின் அன்பு அரவணைப்பினால் வயல்வெளிகள், பள்ளிகள், பயிர்கள் அனைத்தும் பசுமை நிறைந்து செழித்து நிற்கின்றன.

எனதிந்த விவசாயச் சகோதரர்களின் மனைவியரின் பிரார்த்தனைகளால் பச்சை நெல் பொன்நிறம் பெறுகிறது. இந்த வயல்களையே கேளுங்கள்; அதன் எதிரொலி இவ்வாறாக உங்களுக்குக் கேட்கும்:

“இந்த வயல் உழுபவனின் வயல், இந்த மண் உழுபவ னின் மண்; இதில்விளையும்பூக்களும் கனிகளும் உழவ னின் மனைவிக்குரியது.”

அதேபோல் என் தொழிலாளர் சகோதரர்களே — தங்கள் இரத்தத்தின் ஒவ்வொரு துளியையும் கொடுத்து எஜமானர்களின் மாளிகைகளைச் சிவப்பாக்குகிறவர்கள் நீங்கள்! உங்கள் எலும்பையும் மஜ்ஜையையும் உருக்கி வெள்ளிக்காசுகள் வடிக்கப்படுகின்றன. உங்கள் கண்ணீர் கடலில் விழுந்து முத்துகளாக மாறுகின்றன. ஆனால், இன்று நீங்கள் புறக்கணிக்கப்பட்டவர்கள், ஒடுக்கப்பட்ட வர்கள், பசியால் வாடுபவர்கள். உங்களுக்குக் கல்வி யில்லை, பயிற்சியில்லை; பசி தீர உணவும் கிடைக்க வில்லை; உடுத்தத் துணியுமில்லை.

அய்யோ சுயநலக்காரர்களே! அய்யோ அரக்க மன முடைய மனிதர்களே! இன்று விவசாயியின் துயரமும் தொழிலாளியின் வேதனையும் உலகையே அதிரச் செய்தி ருக்கிறது. இப்போதுநமக்கானநாள் வந்து விட்டது. நீங்கள் மிகுந்த துன்பம் அனுபவித்துவிட்டீர்கள் சகோதரர் களே! இப்போது அதற்கான தீர்வின் தேவதூதன் வருகி றான். உங்கள் கலப்பையும் மண்வெட்டியுமே அவனு டைய ஆயுதங்கள். உங்கள் குடிசையே அவனது வீடு. உங்கள் கிழிந்துநைந்த அழுக்கு உடையே அவனுடைய கொடி. நீங்கள் தான் அவனுடைய தந்தையும் தாயும்! உங்களிடையே வரவிருக்கும் அந்த மாமனிதனின் நற்செய்தி வருகையை எதிர்நோக்கி, உங்கள் புத்தெழுச் சிக்கு சலாம்செய்து, நான் இமைக்காமல் பார்த்துக் கொண்டிருக்கிறேன் - இதோ, புதிய சூரியன் உதயமாகிறது! - ஞா.சத்தீஸ்வரன்