காழியூர் ஏரி: பாரம்பரிய மீன்பிடி திருவிழா
13 Jul 2026, 1:02 am
<p><strong>காழியூர் ஏரி: பாரம்பரிய மீன்பிடி திருவிழா</strong></p><p>திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு அருகே உள்ள காழியூர் கிராம ஏரியில், ஆறு ஆண்டுகளுக்குப் பிறகு பாரம்பரிய மீன்பிடி திருவிழா நடைபெற்றது. ஏரியின் நீர்மட்டம் குறைந்ததைத் தொடர்ந்து, கிராம மக்கள் ஒன்றிணைந்து இந்த மீன்பிடி திருவிழாவை உற்சாகத்துடன் நடத்தினர். ஏரிக்குள் இறங்கிய 500-க்கும் மேற்பட்ட கிராம மக்கள், சிறுவர்கள் முதல் முதியவர்கள் வரை வயது வித்தியாசம் இன்றி குழுக்களாக வலைகளை விரித்து மீன்பிடித்தனர். சேற்றில் இறங்கித் தங்களுக்குக் கிடைத்த மீன்களைப் பைகள் மற்றும் கூடைகளில் ஆர்வத்துடன் சேகரித்துச் சென்றனர். நீண்ட இடைவேளைக்குப் பிறகு கிராம மக்கள் அனைவரும் ஒன்றுகூடி பாரம்பரிய முறையில் மீன்பிடித்த நிகழ்வு, காண்போரை வெகுவாகக் கவர்ந்தது.</p>
