முந்தய பக்கம்

கவிதைத் துளிகள் - காயத்ரி மாணிக்கம்

11 Jul 2026, 9:12 pm
கவிதைத் துளிகள் - காயத்ரி மாணிக்கம்

கவிதைத் துளிகள் - காயத்ரி மாணிக்கம்

இரவு..!

அப்படியே உட்கார்ந்திருப்பதில்லை இரவு காலையிலிருந்து பகலெல்லாம் நடந்து சென்று நாளையும் உட்கார்ந்து கொள்வது அதன் இயல்பு!

​மேக ஓவியங்கள்..!

​வானத்துத் தூரிகையில் குளிர்க்காற்றைக் குழைத்துக் குழைத்து கொடுத்த நொடியில் வரையப்பட்டு விடுகின்றன மேக ஓவியங்கள் ரசித்துவிட்டே கீழே இறங்கி வருகின்றன மழைத்துளிகள்!

வானவில்..!

மழை மிரட்டல் இடி மின்னலுக்கு ஊடாகப் பயமற்று வண்ணச் சேலையுடுத்தி வந்துவிட்டுப் போகிறாள் வானவில் காதலி!

Share
FacebookXWhatsAppTelegram