தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

கவின் சாதி ஆணவக்கொலை 2 குற்றவாளிகள் விடுவிப்பிற்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு! தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி வரவேற்பு

yesterday
கவின் சாதி ஆணவக்கொலை 2 குற்றவாளிகள் விடுவிப்பிற்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு! தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி வரவேற்பு

கவின் சாதி ஆணவக்கொலை 2 குற்றவாளிகள் விடுவிப்பிற்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு! தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி வரவேற்பு

சென்னை, அக்.17 -கவின் சாதி ஆணவக் கொலை வழக்கில் இரண்டு குற்றவாளிகள் விடுவிப்பிற்கு எதிராக, தமிழ்நாடு அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளதை தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி வரவேற்றுஉள்ளது.

இதுகுறித்து முன்னணியின் பொதுச் செயலாளர் பி.சுகந்தி, தலைவர் த.செல்லக்கண்ணு ஆகியோர் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:சாதி ஆணவக் கொலைக்கு ஆளான, தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த மென்பொருள் பொறியாளர் கவின் செல்வகணேஷ் வழக்கில் மதுரை உயர்நீதிமன்ற கிளை, குற்றப் பத்திரிகையில் இருந்து இரண்டு குற்றவாளிகளை விடுவித்ததற்கு எதிராக தமிழ்நாடு அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்திருப்பதை தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி வரவேற்கிறது.

கவின் நட்போடு பழகி வந்த பெண்ணின் சகோதரர் சுர்ஜித் இந்த வழக்கின் முதல் குற்றவாளியாகவும், பெண்ணின் பெற்றோர் சரவணன்-கிருஷ்ணவேணி ஆகியோரும் குற்றவாளிகளாகஇவ்வழக்கில் இணைக்கப்பட்டு இருந்தனர். சிபிசிஐடி விசாரணையின் அடிப்படையில் குற்றவாளிகளாக இணைக்கப்பட்டு இருந்த இருவரும் மதுரை உயர்நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

கிருஷ்ணவேணி, கவின் அம்மாவைத் தொடர்பு கொண்டு எச்சரித்ததும், சரவணன்தன் மகளிடம் எச்சரித்ததும், முதல் குற்றவாளியான மகன் தப்பித்துக் கொள்ள படுகொலைக்குப் பின்னர் ஆலோசனைகள் வழங்கினார்கள் என்றும் காவல்துறை அறிக்கையில் குறிப்பிடப்பட்டு இருந்தது. ஆனாலும் சரவணன், கிருஷ்ணவேணி இருவரும் கொலைக்கு உடந்தையாக இருந்தனர் என்பதற்கு சாட்சியங்கள் இல்லை எனக் கூறி உயர் நீதிமன்றம் அவர்களை விடுவித்தது.தமிழ்நாடு அரசு உடனடியாக இந்த ஆணைக்கு எதிராக மேல்முறையீடு செய்ய வேண்டுமென தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி வலியுறுத்தியது. தற்போது தமிழ்நாடு அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருப்பது வரவேற்கத்தக்கது.

கவின் படுகொலை நிகழ்ந்து ஓர் ஆண்டு 3 மாதங்கள் ஆகிவிட்ட நிலையில், தொடர் சட்ட நடவடிக்கைகளைமேற்கொண்டு விரைவான நீதியைப் பெற்றுத் தர வேண்டுமென்று தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி கேட்டுக் கொள்கிறது.இவ்வாறு அவர்கள் கூறியுள்ளனர்.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.