தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

கவின் ஆணவக்கொலை வழக்கு: சுர்ஜித்தின் பெற்றோர் மீதான குற்றப்பத்திரிகை ரத்து!

29 Sept 2026, 4:09 pm
கவின் ஆணவக்கொலை வழக்கு: சுர்ஜித்தின் பெற்றோர் மீதான குற்றப்பத்திரிகை ரத்து!

நெல்லை ஐ.டி. ஊழியர் கவின்குமார் ஆணவப்படுகொலை வழக்கில், முதல் குற்றவாளியான சுர்ஜித்தின் பெற்றோர் சரவணன், கிருஷ்ணகுமாரி ஆகியோர் மீதான குற்றப்பத்திரிகையை உயர்நீதிமன்ற மதுரை கிளை ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது.

தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த கவின்குமார், கடந்த 2025 ஜூலை 27 அன்று பாளையங்கோட்டையில் அவர் காதலித்த பெண்ணின் சகோதரரால் அரிவாளால் வெட்டப்பட்டு ஆணவப்படுகொலை செய்யப்பட்டார்.

இவ்வழக்கில் முதல் பெண்ணின் சகோதரர் சுர்ஜித் பெற்றோர்களான சரவணன் - கிருஷ்ணகுமாரி மற்றும் உற்வினரான ஜெயபல் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்

இவ்வழக்கை சிபிசிஐடி காவல்துறையினர் விசாரித்து, நெல்லை மாவட்ட நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர்.

இதையடுத்து, சுர்ஜித்தின் தந்தையும் காவல் சார்பு ஆய்வாளருமான சரவணன், தாய் கிருஷ்ணகுமாரி மற்றும் உறவினர் ஜெயபால் ஆகியோர் தங்களுக்கு எதிரான குற்றப்பத்திரிகையை ரத்து செய்யக் கோரி உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்தனர்.

விசாரணையில், சரவணன் மற்றும் கிருஷ்ணகுமாரி மீதான குற்றப்பத்திரிகையை ரத்து செய்த நீதிமன்றம், உரிய முகாந்திரமும் ஆவணங்களும் உள்ளதால் உறவினர் ஜெயபால் மீதான குற்றப்பத்திரிகையை ரத்து செய்ய மறுத்து அவரது மனுவைத் தள்ளுபடி செய்தது.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.