காவேரிப்பாக்கம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி நூற்றாண்டு விழா
24 Feb 2026, 3:55 pm
<p><strong>மனித உடலைப் பராமரிப்பதற்கான உலகின் முழுமையான கையேடு சென்னையில் மருத்துவர்கள் வெளியிட்டனர்</strong></p>
<p>சென்னை,பிப்,24- மனித உடலைப் பராமரிப் பதற்கான உலகின் முதல் முழுமையான கையேடாகக் கருதப்படும் “யுனிவர்சல் ஹெல்த் கோட்” (The Univer sal Health Code) என்ற புத்த கம் சென்னையில் வெளியிட ப்பட்டது. சென்னை மருத்துவக் கல்லூரியின் 1984-ஆம் ஆண்டு படித்த 50 சிறந்த மருத்துவ நிபுணர்கள் ஒன்றி ணைந்து, தங்களின் பல ஆண்டுகால ஆராய்ச்சி மற்றும் அனுபவ அறிவின் தொகுப்பாக இந்தப் புத்தகத்தை உருவாக்கியுள் ளனர். சுமார் 300 பக்கங்க ளைக் கொண்ட இந்த நூல், பல்வேறு மருத்துவச் சிறப்புப் பிரிவுகளின் தகவல் களை உள்ளடக்கியது மட்டு மல்லாமல், வாசகர்கள் தங்கள் உடல்நலம் குறித்து தாங்களே சரியான முடிவு களை எடுக்க உதவும் ஒரு வழிகாட்டியாகவும் திகழ் கிறது. இப்புத்தகத்தின் முதல் பிரதிகளை எஸ்ஆர்எம் குழு மத்தின் தலைவர் டாக்டர் ரவி பச்சமுத்து மற்றும் ரேலா மருத்துவமனையின் தலை வர் பேராசிரியர் முகமது ரேலா ஆகியோர் வெளியிட, முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் தினேஷ் கார்த்திக் மற்றும் பிரபல தொலைக் காட்சித் தொகுப்பாளர் கோபிநாத் சந்திரன் ஆகி யோர் பெற்றுக் கொண்ட னர். இந்நூலைத் தொகுத்த சிம்ஸ் மருத்துவமனையின் முதுநிலை நிபுணர் டாக்டர் விஜய் சி.போஸ் பேசுகை யில், “மனித உடலுக்கு உரிமையாளரின் முதல் முழுமையான கையேடு” என்று போற்றப்படும் இப்புத் தகம், பொதுமக்களிடையே உடல்நல விழிப்புணர்வை ஏற்படுத்துவதில் ஒரு மைல் கல்லாக அமையும் எனக் கூறினார். இந்தியாவில் இது போன்ற புத்தகம் வெளியிட ப்படுவது இதுவே முதல் முறையாகும்.</p>
