ரோபோட்டிக் அறுவை சிகிச்சை காவேரி மருத்துவமனை அனைத்து கிளைகளிலும் அறிமுகம்
22 Jul 2026, 11:41 pm
<p><strong>ரோபோட்டிக் அறுவை சிகிச்சை காவேரி மருத்துவமனை அனைத்து கிளைகளிலும் அறிமுகம் </strong> </p><p>சென்னை, ஜூலை 22- சென்னை காவேரி மருத்துவமனை குழுமம், மேம்பட்ட தொழில்நுட்பம் மற்றும் பல்துறை நிபுணத்துவத்தை ஒருங்கிணைத்து ‘காவேரி 3X சென்னை’ என்ற புதிய ரோபோட்டிக் அறுவைசிகிச்சை திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. சென்னையின் மூன்று காவேரி மருத்துவமனைகளிலும் சீரான உயர்தர சிகிச்சை வழிகாட்டுதல்களின் கீழ் இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது. உலகின் அதிநவீன 4-ஆம் தலைமுறை டா வின்சி ரோபோட்டிக் சாதனத்தின் அடிப்படையில் இச்சிகிச்சைகள் வழங்கப்படுகின்றன. இதன் மூலம் இரையக குடலியல், புற்றுநோயியல், சிறுநீர்பாதையியல், மகப்பேறு மற்றும் மகளிர் மருத்துவம், சிறுநீரகவியல் உள்ளிட்ட பல துறைகளில் ஏற்படும் சிக்கலான நோய்களுக்கு ரோபோட்டிக் முறையில் துல்லியமான சிகிச்சையளிக்கப்படுகிறது. குறிப்பாக, ரோபோட்டிக் சிறுநீரக மாற்று அறுவைசிகிச்சையில் காவேரி மருத்துவமனை மிகப்பெரிய நிபுணத்துவத்தைக் கொண்டுள்ளது. குறைந்தபட்ச ஊடுருவலுடன் மேற்கொள்ளப்படும் இத்தகைய அறுவைசிகிச்சைகள் நோயாளிகளுக்கு விரைவான குணமடைதலை உறுதி செய்கின்றன. இதுகுறித்து காவேரி மருத்துவமனை குழுமத்தின் இணை நிறுவனரும், செயல் இயக்குநருமான டாக்டர் அரவிந்தன் செல்வராஜ் கூறுகையில், நோயாளிகள் இனி தங்களுக்கு அருகிலுள்ள காவேரி மருத்துவமனைகளிலேயே உலகத்தரம் வாய்ந்த ரோபோட்டிக் சிகிச்சையைப் பெற்று சிறப்பான பலன்களை அடையலாம் எனத் தெரிவித்துள்ளார்.</p>
