தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

காட்டுமன்னார்கோவில் அருகே அதிர்ச்சி: விவசாயிகள் பெயரில் அரங்கேறும் வண்டல் மண் கொள்ளை!

24 May 2026, 1:20 am
காட்டுமன்னார்கோவில் அருகே அதிர்ச்சி:  விவசாயிகள் பெயரில் அரங்கேறும்  வண்டல் மண் கொள்ளை!
<p><strong>காட்டுமன்னார்கோவில் அருகே அதிர்ச்சி: விவசாயிகள் பெயரில் அரங்கேறும் வண்டல் மண் கொள்ளை!</strong></p><p>​​​​​​​சிதம்பரம், மே 23- காட்டுமன்னார்கோவில் சுற்றுவட்டாரப் பகுதிகளில் விவசாயிகள் என்ற பெயரில், சமூக விரோதிகள் சிலர் வண்டல் மற்றும் செம்மண்ணைக் கொள்ளையடித்துக் கடத்தி வருவதைத் தடுத்து நிறுத்த வேண்டும் என மாவட்ட நிர்வாகத்திற்கு விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். காட்டுமன்னார்கோவில் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள விளைநிலங்களின் சாகுபடித் திறனை மேம்படுத்துவதற்காக, விவசாயிகள் தங்களின் நிலங்களுக்கு வண்டல் மண்ணைப் பயன்படுத்துவது வழக்கம். இதற்காகப் பொதுப்பணித்துறை மற்றும் வருவாய்த்துறை மூலம் ஏரிகளில் இருந்து வண்டல் மண் எடுக்க விவசாயிகளுக்கு உரிய அனுமதி வழங்கப்பட்டு வருகிறது. ஆனால், இந்த அனுமதியைத் தவறாகப் பயன்படுத்தும் சில சமூக விரோதி கள், ம.கொளக்குடி கிராமத்தில் உள்ள தனி யார் விளைநிலங்களில் இருந்து எவ்வித முறையான அனுமதியுமின்றி இரவு, பகல் பாராமல் வண்டல் மண்ணைத் திருட்டுத் தனமாக அள்ளி வருகின்றனர். சுமார் 15 அடிக்கும் மேல் ஆழமாகத் தோண்டி, வண்டல் மண்ணைப் பெருமளவில் கடத்திச் செல்கின்றனர். வண்டல் மண் தேவைப்படும் அப்பாவி விவசாயிகளின் பட்டா, சிட்டா மற்றும் அடங்கல் உள்ளிட்ட நில ஆவணங்களைச் சூழ்ச்சியாகப் பெற்று, ஆன்லைன் மூலமாகப் போலி யாக விண்ணப்பித்து இந்த மண் கொள்ளையில் அவர்கள் ஈடுபட்டு வருவதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. மேலும், இப்பகுதியில் உள்ள அரசு புறம்போக்கு நிலங்கள் மற்றும் பட்டா நிலங்களில் அனுமதியின்றி கிராவல் மண் மற்றும் செம்மண்ணையும் ஜே.சி.பி இயந்திரங்கள் மூலம் வெட்டி எடுத்து, டிப்பர் லாரிகள் வழியாகத் தனியார் நிறுவனங்களுக்குக் கடத்தி விற்பனை செய்து வருகின்றனர். இவ்வாறு சட்டவிரோதமாகத் திருடப்படும் வண்டல் மண் மற்றும் செம்மண், விவசாயப் பயன்பாட்டிற்குச் செல்லாமல் ரியல் எஸ்டேட் நிறுவனங்களின் மனைப்பிரிவு களைச் சமன் செய்யவும், செங்கல் சூளை களுக்கும் அதிக விலைக்குச் சப்ளை செய்யப்படுவதாகப் பகுதி மக்கள் வேதனை தெரிவிக்கின்றனர். இதுகுறித்து காட்டுமன்னார்கோவில் வட்டாட்சியர் பிரகாஷிடம் கேட்டபோது, &quot;இந்த மண் கடத்தல் குறித்துத் தமக்குத் தகவல் எதுவும் வரவில்லை என்றும், இருப்பினும் சம்பந்தப்பட்ட பகுதிக்கு வருவாய்த்துறை அதிகாரிகளை அனுப்பி நேரடியாக ஆய்வு செய்து, கடத்தலில் ஈடுபடுவோர் மீது உரிய கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்&quot; என்றும் தெரிவித்தார். மாவட்ட நிர்வாகமும், வருவாய்த்துறை யும் உடனடியாக இப்போலி ஆவண மண் கடத்தலில் தலையிட்டு, இயற்க வளங்களைச் சூறையாடும் சமூக விரோதிகள் மீது குண்டர் சட்டத்தின் கீழ் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்களும், விவசாயிகளும் அரசுக்கு அவசரக் கோரிக்கை விடுத்துள்ளனர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.