தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

பல்லாண்டு கால போராட்டம் வெற்றி சங்கங்களின் முயற்சியால் காட்டு நாயக்கன் பழங்குடி மாணவனுக்கு சாதி சான்று வழங்கல்!

16 Jun 2026, 1:01 am
பல்லாண்டு கால போராட்டம் வெற்றி சங்கங்களின் முயற்சியால் காட்டு நாயக்கன் பழங்குடி மாணவனுக்கு சாதி சான்று வழங்கல்!
<p><strong>பல்லாண்டு கால போராட்டம் வெற்றி சங்கங்களின் முயற்சியால் காட்டு நாயக்கன் பழங்குடி மாணவனுக்கு சாதி சான்று வழங்கல்!</strong></p><p>ராணிப்பேட்டை, ஜூன் 15- ராணிப்பேட்டை மாவட்டம் திமிரி பகுதியைச் சேர்ந்த பாபு - பொன்னி தம்பதியரின் மகன் சாரதி என்ற பழங்குடி மாணவனுக்கு, பல ஆண்டுகால போராட்ட த்திற்குப் பிறகு ‘காட்டு நாயக்கன்’ சாதி சான்று வழங்கப்பட்டுள்ளது. மாணவன் சாரதிக்குச் சான்றிதழ் பெற அவரது குடும்பத்தினர் நீண்ட நாட்க ளாக முயன்றும் கிடைக்காத நிலையில், தமிழ்நாடு மலை வாழ் மக்கள் சங்கம் மற்றும் காட்டு நாயக்கன் பழங்குடி மக்கள் சங்கம் ஆகிய அமைப்புகள் இதில் தலை யிட்டு தீவிர முயற்சி மேற்கொண்டன. இதன் பலனாக, பழங்குடி செயற்பாட்டாளர் எஸ்.பழனி திரட்டிய பல்வேறு வர லாற்று ஆவணங்கள், தமிழ்நாடு பழங்குடி ஆன்றோர் மன்ற உறுப்பி னர் இரா.சரவணன் முன்னிலையில் ராணிப் பேட்டை வருவாய் கோட்டாட்சியரிடம் சமர்ப்பிக்கப்பட்டன. ஆவணங்களைப் பரிசீ லித்த வருவாய் கோட்டாட்சி யர், மாணவன் சாரதிக்கான சாதிச் சான்றை ஆன்லைன் வழியே வழங்கி உத்தர விட்டார். இந்தச் சான்றி தழைப் பெற்றுத் தருவதில் மலைவாழ் மக்கள் சங்க மாநில துணைத்தலைவர் அய்யனார், காட்டுநாயக் கன் சங்க மாநில தலை வர் உமா, மாநில பொதுச் க்ஷசுயலாளர் வெங்கடேசன் ஆகியோர் முக்கிய பங்காற்றினர். நீண்ட கால போராட்டத்திற்குப் பின் சான்று கிடைத்ததால் மாண வனின் குடும்பத்தினரும், அப்பகுதி பழங்குடி மக்களும் சங்கங்களுக்கும் அதிகாரிகளுக்கும் நன்றி தெரிவித்துக் கொண்டனர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.