தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

கட்டங்காப்பி: அன்பின் அறமும் கசப்பும் நிறைந்த வாழ்வியல் சித்திரங்கள்

15 Mar 2026, 4:11 pm
கட்டங்காப்பி: அன்பின் அறமும் கசப்பும் நிறைந்த வாழ்வியல் சித்திரங்கள்
<p><strong>கட்டங்காப்பி: அன்பின் அறமும் கசப்பும் நிறைந்த வாழ்வியல் சித்திரங்கள்</strong></p> <p>மௌனத்தின் சாட்சியங் கள், மயானக்கரை யின் வெளிச்சம் ஆகிய நூல்கள் மூலம் ஏற்கனவே அதிர்வு களை ஏற்படுத்திய சம்சுதீன் ஹீரா, தனது &lsquo;கட்டங்காப்பி&rsquo; சிறு கதைத் தொகுப்பிலும் அதே கசப்பையும் கண்ணீரின் கரிப்பையும் கடத்துகிறார். மொத்தம் எட்டு சிறுகதை களைக் கொண்ட &nbsp;இத்தொகுப்பு, இஸ்லாமியச் சமூகத்தின் வாழ்வியல் பின்னணியில் மானுடத்தின் விழுமியங்களைப் பேசுகிறது. மதவெறிக்கு எதிரான தடயங்கள் &lsquo;தடயம்&rsquo; சிறுகதை, கோவையில் சிறுபான்மையினர் மீது நடத்தப்பட்ட தாக்கு தல்களின் வடுக்களைத் தடவிப் பார்க்கிறது. இது வன்மத்தைப் பரப்புவதற்காக அல்ல; மாறாக, மதவெறி எந்த ரூபத்திலும் இனி வேண்டாம் என்பதன் உரத்த வெளிப்பாடாக அமைகிறது. &ldquo;இத்தனை வருஷத்தில கபீரைத் தேடி நீ தானப்பா வந்துருக்க...&rdquo; என்ற வரிகள் வாசிப்பவரை ஒரு நிமிடம் குற்றவாளிக் கூண்டில் நிறுத்திவிடும் வல்லமை கொண்டவை. மரணமும் தத்துவமும் இத்தொகுப்பில் இரண்டு முறை வாசிக்கத் தூண்டும் கதை &lsquo;அப்பால் ஒரு பயணம்&rsquo;. இஸ்லாமிய நம்பிக்கைகளான சொர்க்கம், நரகம் மற்றும் கணக்குத் தீர்க்கும் நாளை மையமாக வைத்து நகரும் இக்கதை, ஒரு கட்டத்தில் புனைவின் எல்லையைத் தாண்டித் தத்துவமாக மாறுகிறது. &ldquo;அஸ்ஸலாமு அலைக்கும் தோழர்...&rdquo; என்று இறைவன் அழைப்பதாக முடியும் அந்த ஒற்றை வரி, சித்தாந்தப் பிழி வாகக் கதையின் உயிரைத் தாங்கி நிற்கிறது. இக்கதை ஒரு குறும்படமாக எடுக்கப்பட வேண்டிய அத்தனை தகுதி களையும் கொண்டது. அன்பின் பரிணாமமும் பெண்ணியமும் &lsquo;மோனி&rsquo; சிறுகதையில் ஒரு நாய்க்கும் அந்த வீட்டினருக்குமான பந்தம் அன்பின் புதிய பரிமாணத்தைக் காட்டுகிறது. &lsquo;விடு விப்பு&rsquo; சிறுகதை, இஸ்லாமியச் சமூ கத்திற்குள்ளே நிலவும் பலதார மணத்திற்கு எதிரான மெல்லிய ஆனால் வலுவான எதிர்ப்பைப் பதிவு செய்கிறது. தன் மகளின் வாழ்விற்காகத் தாய் சாஜிதா எடுக்கும் முடிவு, வாழ்வின் தீர்ப்பாக அமைகிறது. &lsquo;சிலிர்ப்பின் அந்திமம்&rsquo; சுற்றுச்சூழல் அழிவை எச்சரிக்கிறது; &lsquo;சதுரகிரி வீடு&rsquo; சமூகத்தின் மறைக்கப்பட்ட அழுகைச் சத்தத்தைக் கேட்கச் செய்கிறது. சம்சுதீன் ஹீராவின் எழுத்தில் உயிர் பெறும் கதாபாத்திரங்கள், வெறுப்பின் அரசி யலுக்கு எதிராக அன்பின் அறத்தை ஓங்கிப் பேசுகின்றன. வாழ்வின் கசப்பையும் உண்மைகளையும் ஒருசேரப் பருக விரும்புவோர் இந்தக் &lsquo;கட்டங்காப்பி&rsquo;யைத் தாராளமாக வாசிக்கலாம். கட்டங்காப்பி (சிறுகதைத் தொகுப்பு) ஆசிரியர்: சம்சுதீன் ஹீரா வெளியீடு: பாரதி புத்தகாலயம் பக்கங்கள்: 112 | விலை: ₹120</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.