சென்னை விரைவு செய்திகள்
yesterday

சென்னை விரைவு செய்திகள்

காட்பாடியில் ஓடும் ரயிலில் இருந்து இறங்கியவர் மரணம்

வேலூர், செப் 13 -திருவண்ணாமலை மாவட்டம், கீழ்பென்னாத் தூர், நெடுங்காம்பூண்டி ரோடு தெருவை சேர்ந்தவர் வெங்கடேசன் (வயது 49) இவர் கீழ்பென்னாத்தூரில் உள்ள டாஸ்மாக் அருகே பெட்டிக்கடை நடத்தி வந்தார்

இவரது மனைவி சுந்தரி, தம்பதிக்கு ஒரு மகன், மகள் உள்ளனர். வெங்கடேசனின் மகன் ஆந்திர மாநிலம் உள்ள குண்ட்டூரில் கல்லூரியில் படித்து வருகிறார்.

வெங்கடேசன், அவரது மனைவி, மகளுடன் மகனை பார்ப்பதற்காக திருவண்ணாமலை ரயில் நிலையத்தில் இருந்து மெமு ரயில் மூலம் மூலம் காட்பாடி ரயில் நிலையத்திற்கு வந்த னர். காட்பாடி ரயில் நிலை

யத்தில் இருந்து கூடூர் செல்ல சபரி எக்ஸ்பிரஸ் ரயிலில் டிக்கெட் முன்பதிவு செய்து இருந்தனர்.

இந்த நிலையில் ரயில் 5-வது பிளாட்பாரத்திற்கு வந்து நின்றது. அப்போது வெங்கடேசன் ரயிலில் இருந்து கீழே இறங்கிய போது எதிர்பாராத விதமாக வெங்கடேசன் தவறி நடைமேடைக்கும் ரயிலுக்கும் இடையில் விழுந்து உயிரிழந்தார். இது குறித்து காட்பாடி ரயில்வே காவல்துறை விசாரணை நடத்தி வரு கின்றனர்.

வீட்டில் கஞ்சா பேக்கிங் செய்தவர் கைது

வேலூர், செப் 13 -வேலூர் மாவட்டம் குடியாத்தம் செரிப் நகர் பகுதியில் வீட்டின் கஞ்சா பேக்கிங் செய்து கொண்டிருப்பதாக கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் குடியாத்தம் நகர காவல் துறையினர் கஞ்சா பேக்கிங் செய்து கொண்டிருந்த கஜா மற்றும் ரிஸ்வான், அப்ரோஸ் என்ற மூன்று பேரை கைது செய்து அவர்களிடம் இருந்த ஒரு கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.