முந்தய பக்கம்

ஆந்திராவில் பிடிக்கப்பட்ட படகுகளை விடுவிக்க கோரி மீனவர்கள் போராட்டம்

10 Aug 2026, 11:18 pm
ஆந்திராவில் பிடிக்கப்பட்ட படகுகளை விடுவிக்க கோரி மீனவர்கள் போராட்டம்

ஆந்திராவில் பிடிக்கப்பட்ட படகுகளை விடுவிக்க கோரி மீனவர்கள் போராட்டம்

சென்னை, ஆக. 10-ஆந்திராவில் பிடித்து வைக்கப்பட்டுள்ள படகுகளை விடுவிக்க கோரி காசிமேட்டில் மீனவர்கள் வேலை நிறுத்தத்தையொட்டி எப்போதும் திருவிழா போல் பரபரப்பாக காணப்படும் காசிமேடு மீன்பிடி துறைமுகம் திங்களன்று ஆள் நடமாட்டமின்றி வெறிச்சோடி காணப்பட்டது.

கடந்த ஜூன் 16ஆம் தேதி ஆந்திர மாநில அரசு, சென்னை, திருவள்ளூர், காஞ்சி

புரம் மாவட்டத்தைச் சேர்ந்த சேர்ந்த 7 மீன்பிடி படகுகளை பிடித்து வைத்துள்ள தாக கூறப்படுகிறது. அந்த படகுகளை விடுவிக்க மறுக்கும் ஆந்திர அரசைக் கண்டித்தும், தமிழக முதலமைச்சரின் கவனத்தை ஈர்க்கும் வகையில் சென்னை காசிமேடு மீன்பிடி துறைமுக அனைத்து விசைப்படகு சங்கங்கள் சார்பில் சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே 3 மாவட்ட மீனவர்கள் திங்களன்று (ஆக. 10) ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

காசிமேடு மீனவர்களும் ஒரு நாள் அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர்.

இதனால் காசிமேடு துறைமுகத்தில் இருந்து மீன்பிடி படகுகள் கடலுக்கு செல்லவில்லை. அதேபோல், மீன் விற்பனை, ஐஸ் நிறுவனங்களின் செயல்பாடு உள்ளிட்ட பல்வேறு தொழில்களும் முடங்கின. இதன் காரணமாக காசிமேடு பகுதி வழக்கத்திற்கு மாறாக வெறிச்சோடியும் காணப்பட்டது.

Share
FacebookXWhatsAppTelegram