தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

பாதுகாப்புக் கவசமா? மனிதக் கவசமா?

22 May 2026, 8:45 pm
பாதுகாப்புக் கவசமா? மனிதக் கவசமா?

பாதுகாப்புக் கவசமா? மனிதக் கவசமா?

காஷ்மீரின் குல்காம் பகுதியைச் சேர்ந்த முகமது ஜஹாங்கீர் மாலிக் என்ற எளிய பள்ளி ஊழியர், ஸ்ரீநகர் மருத்துவமனையில் முகச் சீரமைப்பு அறுவை சிகிச்சை முடிந்து உயி ருக்குப் போராடிக் கொண்டிருக்கும் செய்தி, வெறும் ஒரு காட்டுயிர்த் தாக்குதல் விபத்து அல்ல. அது, நாட்டின் பாதுகாப்புப் படையின ரின் செயல்பாடுகள் குறித்து மிக ஆழமான, தார்மீகக் கேள்விகளை எழுப்பும் ஒரு துயரச் சம்பவமாகும்.

மே 13 அன்று குல்காம் கிராமத்தில் தேடுதல் வேட்டை என்ற பெயரில் ராணுவம் நுழைந்த போது, வழிகாட்ட அழைத்துச் செல்லப்படுவதா கக் கூறி அழைத்துச் செல்லப்பட்ட இளைஞர் கள், இறுதியில் மனிதக் கவசங்களாகப் பயன் படுத்தப்பட்டதாகக் கூறும் குற்றச்சாட்டு அதிர்ச்சியளிக்கிறது. சர்வதேச மனிதநேயச் சட்டங்களின்படியும், சர்வதேசக் குற்றவியல் நீதி மன்றத்தின் ரோம் சட்டத்தின்படியும் ‘மனிதக் கவ சங்களை’ பயன்படுத்துவது ஒரு போர்க்குற்ற மாகக் கருதப்படுகிறது. இத்தகையச் சூழலில், ஒரு சாமானியக் குடிமகனை, கையில் மொபைல் போனைத் தந்து, ஆபத்து நிறைந்த இருண்ட குகைக்குள் நுழையப் பணித்தது எந்த விதத்தில் நியாயம் என்ற கேள்வி எழுகிறது.

குகைக்குள் இருக்கும் ஆபத்தை உணர்ந்து ராணுவ வீரர்கள் தள்ளி நின்று கொண்டு, ராணு வம் சாராத தன்னை உள்ளே அனுப்பியதாகக் கூறப்படும் ஜஹாங்கீரின் வாக்குமூலம், பாது காப்புப் படையினரின் தார்மீகப் பொறுப்பைச் சந்தேகத்திற்கு உள்ளாக்குகிறது. குகைக்குள் இருந்த கரடியின் கொடூரத் தாக்குதலில் இருந்து ஜஹாங்கீர் நல்வாய்ப்பாக உயிர் தப்பியிருந்தா லும், அவரது முகமும் உடலும் சிதைக்கப்பட்டுள் ளன. தாக்குதலுக்குப் பிறகு ராணுவம் அவரை உடனடியாக மருத்துவமனைக்குக் கொண்டு சென்று முதலுதவி அளித்தது பாராட்டுக்குரி யது என்றாலும், அவரை அந்த நிலைக்குத் தள்ளியதே அந்தப் படையினர்தான் என்பதை மறுக்க முடியாது.

பாதிக்கப்பட்ட இளைஞர்கள் ராணுவத்தின் மீதான பயம் காரணமாகப் புகார் அளிக்கத் தயங்குவதாக வரும் தகவல்கள், அங்குள்ள சாமானிய மக்களுக்கும் பாதுகாப்புப் படையின ருக்கும் இடையே இருக்கும் ஆழமான இடை வெளியையும், நம்பிக்கையின்மையையும் வெளிச்சம் போட்டுக் காட்டுகின்றன.

நாகரிகமடைந்த ஒரு ஜனநாயக நாட்டில், குடிமக்களைப் பாதுகாக்க வேண்டிய ராணுவமே அவர்களை ஆபத்தானப் பணிகளுக்குக் கேடயமாகப் பயன்படுத்துவது ஏற்றுக்கொள்ள முடியாதது. இந்தச் சம்பவம் குறித்து ராணுவத் தரப்பில் முறையான, வெளிப்படையான விசாரணை நடத்தப்பட வேண்டும். தவறி ழைத்தவர்கள் மீது சட்டப்படியான நடவடிக்கை கள் எடுக்கப்படுவதன் மூலமே, எல்லையோர மக்களின் அச்சத்தைப் போக்கி, சட்டத்தின் மீதான நம்பிக்கையை நிலைநாட்ட முடியும்.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.