கரூரில் 41 பேர் பலியான சம்பவம் பாதுகாப்பு பணியிலிருந்த 19 போலீசார் டிரான்ஸ்பர்!
20 May 2026, 11:15 pm
<p><strong>கரூரில் 41 பேர் பலியான சம்பவம் பாதுகாப்பு பணியிலிருந்த 19 போலீசார் டிரான்ஸ்பர்!</strong> </p><p>சென்னை, மே 20 - கரூரில் 2025 செப்டம்பர் 27 அன்று, ச. ஜோசப் விஜய் பங்கேற்ற தமிழக வெற்றிக் கழக பரப்புரைக் கூட்டத்தில், 41 பேர் நெரிசலில் சிக்கி உயிரிழந்த துயரச் சம்பவம் நடந்தது. இந்தச் சம்பவம் தொடர்பாக சிபிஐ விசாரணை நடைபெற்று வருகிறது. தற்போது தவெக தலைவர் ச. ஜோசப் விஜய், தேர்தலில் வெற்றிபெற்று முதலமைச்சரான பின்னணியில், கரூர் சம்பவத்தின் போது, பாதுகாப்புப் பணியில் இருந்த காவல் துணை கண்காணிப்பாளர் உட்பட 19 காவலர்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். கரூர் மாவட்டத்தில் மூன்று காவல் துணை கண்காணிப்பாளர்கள், 10 காவல் ஆய்வாளர்கள் மற்றும் 5 உதவி ஆய்வாளர்கள் உட்பட 19 பேர் தெற்கு மற்றும் வடக்கு மண்டலங்களுக்கு மாற்றப்பட்டுள்ளனர். கரூர் நகர துணைக் கண்காணிப்பாளராக இருந்த செல்வராஜ் தூத்துக்குடி மாவட்டத்திற்கும், குளித்தலை துணைக் கண்காணிப்பாளர் கடலூர் மாவட்டத்திற்கும், அரவக்குறிச்சி துணை கண்காணிப்பாளர் தருமபுரி மாவட்டத்திற்கும் மாற்றப்பட்டுள்ளனர். சம்பவம் தொடர்பாக சிபிஐ விசாரணை நடைபெற்று வரும் நிலையில், விசாரணையில் தனிப்பட்ட முறையில் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்ட காவலர்களும் இந்த பணியிட மாற்றத்தில் இடம்பெற்றுள்ளனர்.</p>
