கரூர் கூட்ட நெரிசல் மின்வாரிய அதிகாரிகள் ஆஜர் கரூர்: கரூர் வேலுச்சாமிபுரத்தில்
10 Nov 2025, 2:46 pm
<p><strong>கரூர் கூட்ட நெரிசல் மின்வாரிய அதிகாரிகள் ஆஜர் கரூர்: கரூர் வேலுச்சாமிபுரத்தில்</strong></p>
<p>செப்.27ஆம் தேதி விஜய் பங்கேற்ற தவெக பிரச்சாரக் கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர்உயிரிழந்தனர். 110 பேர் காயமடைந்தனர். இந்த சம்பவம் தொடர்பாக உச்சநீதிமன்ற உத்தரவின்படி சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். விஜய் பரப்புரையின்போது மின்சாரம் தடைபட்டதால் கூட்ட நெரிசலில் பலர் உயிரிழந்ததாக எழுந்த குற்றச்சாட்டை யடுத்து மின்வாரியத் துறை அதிகாரிகளுக்கு சிபிஐ சம்மன் அனுப்பியிருந்தது. இதையடுத்து பவர் கிரிட்-ஐச் சேர்ந்த சென்னை அதிகாரிகள் 2 பேர் திங்கள்கிழமை விசார ணைக்கு ஆஜராகினர்.</p>
